பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்தள ர்ே 39. வாழப்பிறந்த மக்கள் கம் வாழ்நாளில் மூர்த்தி தலம் தீர்த்தங்களைத் தரிசித்துப் பயன் கொள்ளக் தொடங்கினல் அங்த வகையில் நெடுங்காலம் செல் லும், ஐம்பொறிகளுக்கும் உரிய அநுபவங்களில் பெரும்பாலானவை இறைவனுடைய தொடர்புடை யனவாகவே இருக்கும்.

கண்ணுலே அழகிய காட்சிகளைக் காணவேண் டும் என்ற அவா இருப்பது மனித இயல்பு. திருக் கோயில்களில் கண்ணுக்கினிய சிற்பக் காட்சிகளே யும் மலர் நிறைந்த நந்தவனங்களையும் விக்கிரகங் க3ளயும் திருவுலாக்காட்சிகளையும் பரத காட்டியங் களேயும் கண்டு களிக்கலாம். இனிய இசைப் பாடல் களேக் கேட்டுக் களிக்கலாம். அறுசுவை உண்டி களேயும் இறைவனுக்கு கிவேதனம் செய்து துகா லாம். இனிய நீரில் ஆடித் தண்ணிய தென்றல் வீச இன்புறலாம். நறுமலர், தாபம் ஆகியவற்றின்மணத் கைத் துய்க்கலாம். இப்படி ஐம்பொறிகளின் நுகர்ச். சிகளும் இறைவைேடு தொடர்புடையனவாகவே இருப்பதால் மனமும் இறைவைேடு சார்ந்த எண் னங்களையே பெரும்பாலும் எண்ணும். அதனல் தீய எண்ணங்களுக்கு இடமில்லாமல் ஒழியும். இத் ககைய நல்ல பயனைக் கருதியே தமிழ் நாட்டில் மூர்த்தி தலம் கீர்த்தங்கள் அமைந்தன.

மூர்த்திகலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பரபரமே என்று தாயுமானவர் பாடினர். - -

. . . . k. - திருவெண்காடு பழைய தலங்களில் ஒன்று. சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினத்தை அடுத்து
  1. , ,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/45&oldid=596973" இலிருந்து மீள்விக்கப்பட்டது