பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ao பின்னு செஞ்சடை

விளங்குவது. வால்மீகிராமாயணத்தில் அந்தக் கலச் செய்தி வருகின்றது. அங்கே சோம தீர்த்தம், சூரிய. தீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற மூன்று சீர்த்தங் கள் இருக்கின்றன. அவற்றை முக்குளம் என்று சொல்வார்கள். அந்தத் தீர்த்தங்கள் மிக்க புனித மானவை. அவற்றில் மூழ்கினவர் தாம் வேண் டும் பொருள்களைப் பெறுவர் என்ற நம்பிக்கை அன் பர்கள் மனத்தில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

திருஞான சம்பந்தப் பெருமான் திருவெண் காட்டுக்கு எழுந்தருளினர். தமிழ் நாட்டிலுள்ள பல ஊர்களிலிருந்தும் அடியார்கள் அங்கே வந்து இறை வன வழிபட்டார்கள். அவர்களுடைய பக்தியையும் கம்பிக்கையையும் கண்டு இறைவன் கருணயை வியந்து மகிழ்ந்தார் சம்பந்தர். அடியார்களே அணுகி விசாரித்தார். ஒருவர், “என்னுடைய மனைவியை கெடு காட்களாகப் பேய் பிடித்திருந்தது. ஒரு பெரியவர் வெண்காட்டு முக்குளத்தில் ஒரு மண்டலம் ரோடிச் சுவேகாரணியேசுவரரையும் பிரம்மவித்தியா நாயகியையும் வழி பட்டால் இந்தத் துன்பம் தீரும் என்று சொன்னர். அவர் கூறியதை நம்பி இங்கே வந்து நீராடி வழிபட்டோம். இப்போது என் மனே விக்கு யாகொரு குறையும் இல்லை. பழைய தொல்லை. நீங்கியது. நாற்பத்தெட்டு நாள் இருக்க வேண்டும் என்ற சங்கற்பம் இருப்ப கல்ை, பேய்த் தொல்லை நீங்கிலுைம் நாங்கள் இங்கே இருந்து வருகிருேம், அதன் பயனே இப்போது உணர்ந்தோம். தேவ fரைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது" என்று சொல்லி அவரும் அவர் மனேவியும் சம்பந்தப் பெரு' மான் திருவடியில் வீழ்ந்து பணிந்தனர். வேறு சில.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/46&oldid=596976" இலிருந்து மீள்விக்கப்பட்டது