பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A8. பின்னு செஞ்சடை

- తో ఓుarg: . -

பிறருடைய சார்பினுல் இயல்பு மாறுவது ஒரு விதம், தாமே இயல்புமாறி கிற்றல் ஒருவகை. தாருகாவனத்து முனிவர் தாமே கம் இயல்பு மாறி அந்தண்மையினின்றும் நீக்கி நின்றனர். அவரைச். சார்ந்து மான் கன் இயல்பு மாறியது. கங்கையாறு. ஒரு சமயம் தன் இயல்பு மாறி கின்றது. பிறர்கன் பால் வந்து ஆடிக் குளிர்ச்சியையும் தாய்மையையும் அடையும்படி செய்வது கங்கை அது கண்மையை யும் மென்மையையும் உடையதாகலின் அதனைப் பெண்ணுகச் சொல்வார்கள். பிறருடைய புற அழுக் கையும் மன அழுக்கையும் போக்கும் அது அகங்கா ரத்தால் வெப்பம் அடைந்தது. கன் முன்னேரின் சாம்பலின்மேற் பாய வேண்டுமென்று பகிரதன் தவம்புரிந்து கேட்டபோது, என்னேக் காங்குவார் யார்?' என்று அகங்கரித்துக் கேட்டது. அப் போது இறைவன் அதனேக் காங்கிக் கன் சம்பக் தத்தால் அதன்பால் உண்டான அகங்கை அழுக் கைப் போக்கின்ை. அதுகாறும் வானுலகத்துக்கு மாத்திரம் பயன்பட்ட கங்கை இறைவன் திருச்சடை யில் ஏறியவுடன் தூய்மையும் பெருமையும் பெற்று. மூன்று உலகத்துக்கும் நன்மை செய்வதாயிற்று. இறைவனுடைய கருணேயில் இது ஒரு வகை. தன். இயல்பு மாறிய கங்கையை மீட்டும் தாயகாக்கின்ன். அவன்.அவனுடைய ெ சஞ்சடையில் கருங்கூ ந்தலே. யுடைய அலை மகளாகிய கங்கை வாழ்கின்ருள்.

கலைவாழும் அங்கையும் கங்கை வாழும் செஞ்: சடையும் இயல்பு மாறியவற்றைத் தன் அரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/54&oldid=596991" இலிருந்து மீள்விக்கப்பட்டது