பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோய் தீர்க்கும் விமலர்

சிவபெருமானுக்குஅன்பர் அவர். அவர்அன்பு வளர்ந்த வரலாறே அழகானது. இளம் பருவத்தில் பெரியவர்களோடு கோயிலுக்குச் செல்வது வழக்கம். அவர்கள் இறைவனேக் கும்பிடும்போது அவரும் வழி பட்டார். இந்தப் பழக்கத்தால் தென்னங் குரும்பை யில் நீர்புகுந்தது போல அவர் உள்ளத்தில் அன்பு தலைப்பட்டது. பெரியவர்கள் கோயிலுக்குப் போகாத நாளிலும் அவர் போய் வந்தார். அவர் வளர்ந்தார்; அவர் அன்பும் வளர்ந்தது.

கோயிலுக்குள் போய் இறைவன் திருமுன் விழுந்து வணங்கி உள்ளம் கசிந்து வாயாரப் பாடும் இயல்புடையஅவர், கோயிலுக்குப் போகாதபோதும் கோபுரத்தைக் கண்டால் கும்பிடு போடுவார் ; கலே வணங்குவார்; உள்ளம் கசிவார். பிறகு அடியார்க அளக் கண்டபோது சிவபெருமானே கினேந்து கையால் அஞ்சலி செய்வார்; தலேசாய்ப்பார்; உள்ளம் கசி வார். இந்த கிலேயும் தாண்டியது. எந்த இடத்தி லும் எந்தக் காலத்திலும் இறைவனே கினைத்துக் கொள்வார். உடனே கையைக் குவித்துத் தொழுது தலை சாய்த்து உள்ளம் குழைவார். - இறைவன் திருமுன் வீழ்ந்து வணங்குவது முறை. கையைக் குவித்துத் தொழுதல் ஒரு முறை. வீழ்ந்து வணங்கிலுைம் மீண்டும் எழுந்து கையைக் குவிப்பது வழக்கம். அப்படிக் குவிப்பது எதைக் காட்டுகிறது? கை செய்கைக்கு அடையாளம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/58&oldid=596999" இலிருந்து மீள்விக்கப்பட்டது