பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பின்னு செஞ்சடை பசுமாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்கள். பால், தயிர், நெய், கோமயம், கோஜலம் என்னும் ஐந்தும் இணேந்ததைப் பஞ்ச கவ்வியம் என்றும் ஆன் ஐந்து என்றும் கூறுவர்.

"ஆவினுக் கருங்கலம் அரன்,அஞ் சாடுதல்' என்று வாகீசப் பெருந்தகையார் திருவாய் மலர்க் தருளினர். - -

இறைவன் அன்பர்கள் ஆட்டும் நெய்யிலே ஆடு வான்; அவர்கள் கலந்து ஆட்டும் ஆனஞ்சிலும் ஆடுவான். இப்படி அன்பர்கள் பூகிக்கும்படியாக உருவமும் திருக்கோயிலும் கலமும் உடையவகை அவன் இருக்கிருன்.

- தெய்ஆ டுதன் அஞ்சு உட்ையார்

நிலாவும் ஊர்போலும்,

அவன் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களுக் குள் ஒன்று திருப்பாசூர். அது தொண்டை காட் டில் உள்ளது. குறிஞ்சி கிலப்பண்பு மிக்கு இருப் பது. அங்கே காந்தட் செடிகள் பூத்து கிற்கின் றன. காந்தள் என்பது வேலிக்காலில் வளரும் ஒருவகைச் செடி, அதன் மலர் கைவிரல்களைப் போல இருக்கும். அதன் பூவைத் துடுப்பென்று பழம் புலவர்கள் சொல்வார்கள். தூரத்திலிருந்து பார்த்தால் பாம்பு படம் எடுத்தாற்போல இருக் கும். படத்தையுடைய காகத்தைப் போன்ற தோற் றத்தை உண்டாக்கும் காங்கள் மலிந்த ஊர் பாசூர். இயற்கையின் எழில் நலத்தோடு இறைவனுடைய அருள் நலத்தையும் இணத்துக் காட்டுபவர் ஆளு டைய பிள்ளையார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/62&oldid=597007" இலிருந்து மீள்விக்கப்பட்டது