பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பின்னு செஞ்சடை

அதனைச் சுற்றி நல்ல வுயல்கள் இருப்பது போலத் திருக்கோயில்களைச் சுற்றி அன்பர்கள் வாழ்கிருர் கள். ஏரியின் நீர் பாயும் வசதியிருக்குமானுல் தரிசு கிலமும் வயலாகிவிடுகிறது. கோயில் இருக்குமானல் அதனுடைய சார்பில்ை அன்பு இல்லாதவர்களும் அன்புடையவர்களாய் விடுகிருரர்கள்.

முதுகுன்றத்தில் வரும் அன்பர்களின் கூட்டம் மிக அதிகம். அவர்களுடைய வழிபாடுகளைக் கண்டு மற்ற மக்கள் உள்ளம் உருகி அவர்களைப் போலவே வழிபடப் புகுவது ஆச்சரியம் அன்று. இதோ குரங்குகள் கூட வழிபடுகின்றன.

ஆம்; மனிதன் செய்வதைப் பார்த்து அது மாதிரியே செய்வது குரங்கின் இயல்பு. திருமுது குன்றக் கோயிலின் அருகில் உள்ள சோலைகளில் வாழும் குரங்குகள் அன்பர்கள் இறைவனே வழிபடும் முறைகளைக் கவனிக்கின்றன. மலர்களைக் கொண்டு வழிபடுவதையும் கனிகளைக் கொண்டு போய் நிவே

தனம் செய்வதையும் பார்க்கின்றன.

அவைகளும் அவ்வாறு செய்ய எண்ணுகின்றன. பலவகை மலர்களைப் பறித்துத் தொகுக்கின்றன. முதுகுன்றத்தின் சூழலிலே வாழ்வதல்ை அவை கம் இயல்பே மாறிப்போகின்றன. குரங்கின் கையில் மலரைக் கொடுத்தால் அது அதைக் கசக்கிவிடும் என்று சொல்வார்கள். இந்தக் குரங்குகளோ சார் பின் சிறப்பால் தாமே பல இனமலர்களைப் பறித்துக்கொண்டு திருக்கோயிலுக்கு முன்பு சென்று மலரைத் துளவிக் க்ைகுவிக்கின்றன; கலை சாய்த்து வணங்குகின்றன. குரங்காட்டியினம் பழக் கப்பெற்ற குரங்குகள் எசமானுக்குச் சலாம்போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/68&oldid=597019" இலிருந்து மீள்விக்கப்பட்டது