பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு கோயில்கள் 63.

என்ருல் போடுகின்றன. இங்கேயோ யாரும் பழக்கா மல் சூழ்நிலையின் வாசனையினல் அன்பர்களைப் போல மரத்தின்மேல் ஏறிப் பல இன மலர்களைக் கொண்டு வந்து திருக்கோயிலின் முன்பு வந்து அவற்றைத் தாவித் தொழுது வணங்குகின்றன.

இத்தகைய அற்புதமான சூழ்நிலையையுடை யது திருமுதுகுன்றத்துக் கோயில்.

  • * * * * * * R * திகழ்வானே மந்தி ஏறி இனமா மலர்கள் பலகொண்டு . முந்திந் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே. [ (சிந்தையாகிய கோயிலில்) விளங்கும் சிவபெருமானேக் குரங்குகள் (மரத்தின்மேல்) ஏறிப் பலஇனமாகிய பெரிய மலர்கள் பலவற்றைப் பறித்துக் கொண்டு (திருக் கோயிலிற்கு) முன் வந்து (மலரைத்தாவிக்) கையால் தொழுது (கல்ே சாய்த்து) வணங்கும் திருக்கோயில் கிருமுதுகுன்றம் ஆகும்.

மந்தி என்பது பெண் குரங்குக்குப் பெயர். ஆயினும் இங்கே பொதுவாகக் குரங்குகளேச் சுட்டியது. இனம் . வகை. இனம் ஆம் மலர்கள் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம். முக்தி - முன் சென்று. முதுகுன்றமாகிய தலத்தில் உள்ளது கோயில், இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை பற்றிக் கோயில் முது குன்றே என்றர். திகழ்வானே வணங்கும் என்று கூட்டவேண்டும்.) இரவி முதலாக இறைஞ்சும் பக்குவர்களின் உள்ளமாகிய திருக்கோயிலிலும் இறைவன் எழுந் தருளியிருக்கிருன்; அன்பர்கள் வழிபட அது கண்டு மந்திகளும் வழிபட யாவருக்கும் எளியணுக முது குன்றக் கோயிலிலும் விளங்குகிறன். சிங்தை யென்னும் திருக்கோயிலும் சிலையால் அமைத்த திருக் கோயிலும் இறைவன் உறையும் இருவகைக் கோயில்கள். அகக் கோயிலில் வழிபடும் தகுதி வரவேண்டுமானல் முன்பு புறக்கோயிலில் வழிபட வேண்டும். - . . . . . .” - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/69&oldid=597021" இலிருந்து மீள்விக்கப்பட்டது