பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல் நெஞ்சே! 69

ஐயோ! பாவம் ! இப்போது உண்மை விளங் குகிறதா ? தந்தையார் போயினுi : தாயரும் போயினு: ; தாமும் போவார்; ஒரு கூற்றத்தார் கொந்த, வேல் கொண்டு பார்க்கிருர்; கொண்டு போவார்; நாமும் போவோம்; கூற்றத்தார் கையினின்றும் கப்பமுடியாது’ என் பதை நன்முக உணர்ந்தாயா ஆம் ; உணர்ந்து விட்டாயென்றே தோன்றுகிறது. உணர்ந்து அஞ்சு கிருயே. இந்த அச்சம் வேண்டியதுதான். உயிருக்கு இறுதி வருமே என்ற அச்சம் உண்ட்ால்ை தான் அதற்குப் பரிகாரம் எது என்ற கேள்வி பிறக்கும்.

பரிகாரம் கான் சொல்கிறேன், கேள். அஞ்சாதே. கூற்றுவருைக்கும் கூற்றுவன் ஒருவன் இருக்கிருன். காலத்துக்குள் அகப்பட்டவர்களிடம் காலனர் ஆற்றல் செல்லும் ; காலத்துக்குள் அகப் ப டா த வ ன் ஒருவன் உண்டு. அவனிடம் கூற்றுவனர் ஆற்றல் செல்லாது, அப்பெருமான் திருவாரூரில் வாழ்கின்றன். அழகிய தண்ணிய ஆளுரைத் தெரியாகா உனக்கு ஊரும் அழகு : பேரும் அழகு ; தேரும் அழகு ; ருேம் அழகு. தனக்குரிய எல்லாவற்றையும் அடியார்களுக்கு வழங்குகின்ற தியாகராசப் பெருமான அடைந்தால் உய்யலாம். வயலும் குளமும் நிறைந்த தண்ணிய ஆரூர் புகுங்கால் கூற்றுவருைடைய வெப்பம் ஒழிந்து போகும். கூற்றுவர்ைக்கு அஞ்சில்ை தான் பக்தி பிறக்கும். அந்தப் பயபக்தியினலே ஆரூ ானத் தொழுது உய்யலாம். இது பற்றி வீணே மயக்கம் அடைய வேண்டாம். உறுதியாக இதை நம்பு. அஞ்சாதே. - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/75&oldid=597033" இலிருந்து மீள்விக்கப்பட்டது