பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளானவன் 73

வேறு பொருள் இல்லை என்ற துணிவு இவர்களுக் கும் வந்துவிட்டது.

昂,炎 * 豪 畔 平 துனேக் கொண்டதம் பற்று அறப் பற்றித் தேடுவார். -

இப்படி இன்னும் பலவகையில் அவனேயே பொருளாகக் கொண்டு வழி படுவோர் அளவிறக் தோர். அவர்கள் யாவருக்கும் பரம்பொருளாய், வழிபடு பொருளாய், லட்சியப் பொருளாய், மதிக்கத் தக்க பொருளாய், கினேந்து வாழ்த்தி வழிபட்டு அடையத்தக்க பொருளாய், கற்றகல்விக்குப் பொரு ளாய், கேட்ட கேள்விக்குப் பொருளாய், எழுதாக் கிளவியின் பொருளாய், எழுதுங் கிளவியின் பொரு ளாய், சொல்லின் பொருளாய், அழியாப் பொரு ளாய், அளவிடாப் பொருளாய், பிரபஞ்சத்தின் பொருளாய்த் திகழ்பவன் இறைவன். இசை பாடுவா ருக்குப் பொருளானவன் அவன்; பல்பொருட் பயன் உகந்து அன்பால் கூடுவார் பொருளானவன் அவன்; துணேக்கொண்ட தம் பற்று அறப் பற்றித் தேடுவார் பொருளானவன் அவன். r

பாடுவார் இசை, பல்பொருட் பயன்உகந்து அன்பால் -

கூடு வார்,துணைக் கொண்டதம் பற்று அறப் பற்றித்

தேடு வார்பொருள் ஆனவன். *

(தன்னுடைய புகழைப் பாட்டில்ை பாடுவாருக்கும், பல பொருளாகிய பயனே விரும்பி அன்பினல் ஒன்றுபடுவாருக்கும், துணையாகப் பற்றிக்கொண்ட தம் பழைய பற்றெலாம் அற்றுப் போகத் தன் இனப்பற்றித் தேடுவாருக்கும் பொருளானவன். - இசை பாடுவார் 6rರ್ಘಹ. @ణ5 - புகழ், சங்கிதமும் ஆகும். பாடுவார் என்றமையாலே பாட்டுப் பெறப்படுவதால் இசை யென்பதற்குப் புகழென்று பொருள் கொள்வது சிறப்பு. பல் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/79&oldid=597041" இலிருந்து மீள்விக்கப்பட்டது