பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பின்னு செஞ்சடை

வழியே பல யே குணங்களே வளர்க்கிருரன். அவ் விரண்டையும் நீத்து ஈடு கிலேயில் இருப்பவர்கள் மெய்ஞ்ஞானிகள். இறைவனும் விருப்பு வெறுப்பு

இல்லாதவன். -

வேண்டுதல்வேண் டாமையிலான் அடி சேர்ந்தார்க்

கியாண்டும் இடும்பை இல ’

என்பது திருக்குறள். இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன். அவன் அடி சேர்க்கவர்களும் விருப்பு ' வெறுப்பற்றவர்கள். விருப்பு வெறுப்பு அற்றவர் களுக்குப் பிறரால் வரும் துன்பம் இல்லை. தம்மவர், அல்லாதார் என்ற வேறுபாடு இன்மையின் அவர்கள் எல்லோருக்கும் உறவினர்களாகிவிடு கிருரர்கள். - -

ஞானசம்பந்தப் பெருமானுக்கு இறைவனு டைய அருங் குணங்கள் கன்ருகத் தெரியும். சில சில குணங்களை அங்கங்கே குறிப்பாகவும் வெளிப் படையாகவும் எடுத்துக் காட்டுவார். அவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்பதை வெளிப்படை யாகச் சொல்லாமல் குறிப்பாகப் புலப்படும்படி சொல்கிருரர். இறைவன் விருப்பு வெறுப்பு இல் லாதவன் என்று சொல்வது கூட அத்தனை சிறப் பன்று. அவனைச் சார்ந்த பொருள்களும் உலகிய லின்படி பார்த்தால் ஒன்றற்கு ஒன்று பகையாக இருந்தாலும் அவனேச் சார்ந்த பிறகு தம்முள்ளே உள்ள பகைமை நீங்கி ஒரே கிலேயில் அருகருகே இருக்கின்றன. . . . . . .

o - *

- பழங் காலக் கதைகளில், செங்கோன்மையிற் சிறந்த மன்னர்களின் ஆட்சி முறையை வருணிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/8&oldid=596872" இலிருந்து மீள்விக்கப்பட்டது