பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பின்னு செஞ்சடை

சக்தியை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன. சுட்ட கத்தரிக்காயைப் போலத் தோல் சுருங்கி விடுகிறது. இந்த கிலேயில், இளைத்துப் போன வேங்கலு: டைய பலவீனத்தையறிந்து படையெடுக்கும் பகை வரைப் போல ஒன்றின்மேல் ஒன்ருகப் பல கோய் கள் வந்து கப்பிக் கொள்கின்றன. நோய் மிகுதி யாக ஆக காக்குக்கு ருசி தெரிவதில்லை. உணவே வேண்டியிருப்பதில்லை.

இப்படி நாளடைவில் நோய்கள் இந்த உடம் பைக் குலேத்துத் தம் போக்கிலே இழுத்தடித்து அழித்து விடுகின்றன. இத்தகைய காட்சியை நாம் பலரிடத்தில் பார்க்கிருேம். நமக்கும் இப்படி நேர்ந்தாலும் நேரலாம். ஆதலின் அதற்கு முன்பே ஏற்ற பாதுகாப்பைத் தேடிக்கொள்ள வேண்டும். -

கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றிஒன்ற லாத நோய் உண்கிலாமை செய்து அம்மை உய்த்து அழிப்ப தன்முனம். (கண்கள் காண்பதை நீங்கி, மேனி கன்றினும் போலச் சுருங்கி, ஒன்றல்லாத பல நோய்கள் உண்ணும் ஆற்றல் இல்லா மைய உண்டாக்கி உங்களைத் தம் போக்கிலே செலுத்தி, அழிப் பதற்கு முன்னல். - -

காண்பு . காணுதல், ஒழிந்து - கெட்டு. கன்றி - திரைத்து. ஒன்று அலாத கோய் என்றது. பல கோய்கள் என்பதைப் புலப். படுத்தியது. உண்கிலாமை செய்து . உண்ணும் ஆற்றலில்லா மையை உண்டாக்கி. உய்த்து. செலுத்தி; நாம் நம் விருப்பப்படி செல்வதை விட்டு கோய்கள் தம் போக்கிலே கம்மைப் போகும்படி செய்கின்றன். அழிப்பதன் முனம் ка இறுதியிலே மரணம் அடையச் செய்வதற்கு முன்னலே.) - -

+

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/84&oldid=597051" இலிருந்து மீள்விக்கப்பட்டது