பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பின்னு செஞ்சடை

'முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்கிாள் அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்' என்று திருமூலர் சொல்வார்.

கண் பார்வையை இழக்கச் செய்யும் முதுமை யினின்றும் பாதுகாப்பை அடையப் பார்வை சிறப் பாக உள்ள ஒருவனே அடைய வேண்டும். இறை: வன் எல்லோரையும் போல இரண்டு கண்களேப் பெற்றகோடு, யாருக்கும் இல்லாக மூன்றுவது கண். ஒன்றை உடையவன். அது ஞானக்கண்.

"............ இமையாத முக்கண் - மூவரிற் பெற்றவன் என்று மணிவாசகப் பெருமான் போற்றுவார். ‘கண்கள் மூன்றுடைய கருத்தன் சிவபெருமான்; ஞானக் கண் படைத்தவன். அவன் காட்ட மற்ற வர்கள் காணுகிருரர்கள். ஆகவே கண்கள் காண்பு ஒழிந்து முதுமை எய்தும் மக்களுக்குக் கண்கள் மூன்றுடைய கருத்தன் பாதுகாப்பாக இருப்பான். - ★

у у

உடம்பு தளர்ந்து கோய் வத்து சோறு வேண்டி யிருக்காமல் துன்புறுவது முதியவர்களின் இயல்பு. தேவர்கள்கூட ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் அதை மாற்றவும், சாவா மலே இருக்கவும் மருந்து தேடினர்கள். உலகத்தி அள்ள மூலிகைகளை யெல்லாம் தொகுத்துக் கொண்டுவந்து கசக்கிப் பாற்கடலிலே பிழிந்தார்கள், பிறகு அதைக் கடைந்தால் அமுதம் வருமென்று எண்ணிக் கடைந்தார்கள். அமுதம் கிடைத்து விட்டால் கரை திரை மூப்புச் சாக்காடு பசி காகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/86&oldid=597055" இலிருந்து மீள்விக்கப்பட்டது