பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வதுமுன் காத்தல் 81 ,

ஒன்றும் இல்லாமல் வாழலாம் என்பது அவர்கள் எண்ணம். அமுதம் எளிதிலே கிடைப்பதாக இல்லை. அதற்கு முன்பு அவர்கள் எதிர்பாராதபடி பாம் கடலிலிருந்து ஆலகால விடம் எழுந்தது. அக்க நஞ்சைக் கண்டு தேவர்கள் வெருண்டனர். அமரர் அத்தனே பேரையும் ஒரு கணத்திலே தன் காற்று வீசினலே சாகும்படி செய்யவல்ல நஞ்சு அது. அது கண்டு வெருவி இறைவனிடத்திலே ஒடினர்கள்; அலறிப் புடைத்து அழுதார்கள். இ ைற வ ன் கருணே பூத்து அந்த நஞ்சை எடுத்து அயின்றன். தேவர் உய்ந்தனர். பின்பு அமுது கடைந்து உண் டனர். நோயும் மூப்பும் பிற அல்லல்களும் நீங்கி ஒளி பட்ைத்த மேனியினர் ஆனர்கள். விண்ணிலே இப்போது குலாவிக் கொண்டிருக்கிருரர்கள். அவர் கள் இப்படி மேனி ஒளிபெற்றுக் குலாவுவதற்குக் காரணம் இறைவன் நஞ்சமுண்ட அருட்செயல்தான். அத்தகைய அருளைச் செய்தவன், மேனி கன்றி நோயால் துன்புறும் இயல்புடைய மக்களைக் காப் பாற்றமாட்டான? ஆகவே, அவன் உள்ள இடமாகிய சீகாழிக்குச் சென்று அவனைப் புகலடையுங்கள். உங்களுக்கு இன்பம் உண்டாகும்.

விண்குலாவு தேவர்உய்ய வேல்நஞ்சு அமுதுசெய் * . . . . கண்கள்மூன்று உடையனம் கருத்தர்காழி சேர்மினே. (விண்ணுலகத்தில் மகிழ்ச்சியோடு குலாவுகின்ற தேவர்கள் உயிர் பிழைப்பதன் பொருட்டு, பாற்கடலிலே தோன்றிய ஆலகால விடத்தை உண்ட, மூன்று கண்களே உடைய எம் முடைய தலைவருக்குரிய சீகாழியை அடையுங்கள்.

விண் தேவர் உலகம், உய்ய - பிழைக்க வேலை - கடல்: இங்கே பாற்கடல், அமுதுசெய். உண்டருளிய அமுது செப் - 6 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/87&oldid=597057" இலிருந்து மீள்விக்கப்பட்டது