பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.86 பின்னு செஞ்சடை

இயல்பு அமையும்; நம் குறையைச் சொல்லி அழத் தோன்றும். - -

ஆகவே, வாயார அவன் திருநாமம் பன்னுவதற் குத் தைரியம் வேண்டும்; அதைவிட அதிகமான தைரியம் ஏத்துவதற்கு வேண்டும்; அதைவிடப் பின்னும் மிகுதியான துணிவு பாடுவதற்கு வேண் டும். அறியாதார் இவ்வாறு பாடிப் பணியும் பக்தர் களைக் கண்டு ஏசலாம் ; சிரிக்கலாம். அவற்றைப் பொருளாக எண்ணுவதானல் அத்தகையவர்களின் அன்பு உயர்ந்ததாகாது.

'காடவர் பழித்துரை ஆனது வாக ' - என்று மாணிக்க வாசகர் சொல்லுகிருரர். பிறர் பழிப்பையும் புகழையும் எதிர்பாராமல் இறைவனைப் பன்னுதலும் ஏத்துதலும் பாடுதலும் வழிபடுதலும்

அன்பர்களுக்கு இயல்பு.

ஞான சம்பந்தப் பெருமானும் அவருடன் வந்த தொண்டர்களும் வலஞ்சுழி வாணனே வாயாரப் பன்னினர்கள்; ஆதரித்து எத்தினர்கள்; வாயாரப் பாடினர்கள். ஒருவரேனும் பிறர் ஏதேனும் சொல் வார்களே என்று எண்ணி நாணவில்லை. அப்ப, னுடைய சங்கிதானத்தில் குழந்தைகள் தம் குறை யைச் சொல்லிக் கொண்டால் அதற்குத் தடை செய்வார் யார்? - -

இந்த வழிபாட்டில்ை பெற்ற இன்பம் தனிச் சிறப்புடையதாக இருந்தது. அந்த இன்பத்தைப் பெற்ற தொண்டர் கூட்டத்தினர் அனைவரையும் கினேந்து ஞானசம்பந்தர் பாடலானர். -

நெஞ்சே வலஞ்சுழி வாணனே வழிபடப் பெற். ருேம்; அப்படிப் பெற்றது முன்னைப் புண்ணியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/92&oldid=597067" இலிருந்து மீள்விக்கப்பட்டது