பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன புண்ணியம் செய்தனே ! 87

தின் பயன். இதற்கு ஒரு பயன் உண்டு என்று எண்ண வேண்டாம். இதுவே பெரும் பயன். இதுவே இன்பம் பயப்பது. இதுவே முன் செய்த பெரும் புண்ணியத்தின் சிறந்த பயன். இது எல் லோருக்கும் எளிதிலே கிடைக்காது ' என்றெல்லாம். கினேக்கும்படித் திருப்பாட்டுப் பாடினர்.

என்ன புண்ணியம் செய்தனே, நெஞ்சமே ! இருங்கடல் வையத்து - முன்னே நீபுரி நல்வினைப் பயனிடை?

முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி

வாணனே வாயாரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்

வழிபடும் அதஞலே. - (நெஞ்சே! முழுமையாகிய மாணிக்கமும் முத்துக்களும் தங்கும் காவிரி யாறு வளையவரும் திருவலஞ்சுழியிலே எழும். தருளியிருக்கும் சிவபெருமானே, வாயாாத் கிருநாமத்தைச் சொல்லி, அன்பு செய்து புகழ் பரவியும், பாடியும் வழிபடும். அந்த இன்பம் தரும் அநுபவத்தாலே, இந்தப் பெரிய கடல் சூழ்ந்த உலகத்தில் முன்பு செய்த நல்ல வினேயின் பயனுகிய புண்ணியங்களுக்குள்ளே அதற்குக் காரணமாக என்ன புண்ணி: யத்தைச் செய்தாய்! .. - .

என்ன . எத்தகைய. புண்ணியம் . புண்ணியச் செயல். இருங்கடல் . பெரிய கடல் சூழ்ந்த கல்வினைப் பயனிடை - நல்ல பயனை யுடைய வினையிடை என மாற்றிப் பொருள் கொள்க; கல்ல பயனேத் தருகின்ற செயல்களுக்குள்ளே. பயனிட்ை என்ன புண்ணியஞ் செய்தனே என்று கூட்ட வேண்டும். முழுமணி -- துளைக்காத மணி. பிறக்கும். இடங்களாற் பலவாகும் முத்துக் களேத் தாளங்கள் என்று பன்மையாற். கூறினர். வாணன். வாழ்கன்; எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். வாயா என் பதைப் பன்னுதலுக்கும் எத்துதலுக்கும் பாடுதலுக்கும் கூட்டுக..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/93&oldid=597069" இலிருந்து மீள்விக்கப்பட்டது