பக்கம்:பிராயச்சித்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 லா. ச. ராமாமிருதம் அவள் செயல் அவள் வசம் மீறிவிட்டது. அருகே சென்று, శీ వ్రైrr; j * * மனிதனுக்குக் கேட்கவில்லை. தன் வாசிப்பில் அப்படி இழந்திருந்தான். இன்னும் அருகே இன்னும் தாழ்ந்த குரலில் 'தர்ம ராஜன் லார்!’ - கூட்டத்திலிருந்து அதட்டல்கள் கிளம்பின. ஆனால் அவள் பொருட்படுத்தவில்லை. அவள் வசத்தில் அவள் இல்லை. திடீரெனக் கலவரம் அதிகரித்து அவளைத் தன் நிலைக்குக் கொணர்ந்தது. "ஐயா, இவர் என் அப்பா. நெடுநாளா நான் தேடிண் டிருக்கிற அப்பாரு.' அந்த ஆள் எழுந்திருக்க முயன்றான். ரொம்ப நேரம் சப்பளம் கொட்டி உட்கார்ந்திருந்ததால், கால்கள் திமிர்த்துவிட்டன. போயிருந்த தடம் கலைந்து சுற்று முற்றும் நோக்கினான். 'ஐயா கெஞ்சிக் கேக்கறேன். தயவுசெய்து கலைஞ்சுப் போங்க ஐயா, எங்கள் நிலை புரிஞ்சுக்கங்க, வேடிக்கை பார்க்காதீங்க!” அவளுடைய கூப்பியகரங்கள், வழிந்தோடும் கண்ணிர், உடைந்த குரல் கண்டு கூட்டம் கலகலத்து நடுவில் பெரி தாக விண்டு மேலும் மேலும் கழன்று கிசுகிசு மொசு மொக கலவரத்துடன் கலைந்து அடியோடு கரைந்தும் போயிற்று. எஞ்சி அவர்கள் இருவர் மட்டுமே நின்றனர். அவன் கை கொடுத்துத் துக்குமுன் சமாளித்து தாமே எழுந்து நின்றுவிட்டார். எது நேரக்கூடாது என்று எத்தனை சிரமத்துடன் விலக்கிக்கொண்டிருந்தேனோ அதுதான் நடந்துவிட்டது. கடவுள் சித்தம் அப்படி இருக்கிறது போலும்'