பக்கம்:பிராயச்சித்தம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 லா. ச. ராமாமிருதம் சொன்னால் என்ன? அந்த விளிம்பில்தான் இருந்தாள்) எப்படி இந்தத் துணிச்சல்? அந்தக் கேள்வியை மனம் சுற்றிச் சுற்றி வந்து வேறு தடத்துக்கே கொண்டுபோய் விட்டது. அந்த ஒரு வாரம் வரை, சம்பவத்தை நினைத்து நினைத்து, அதிலேயே ஊறிப்போய் ஒரு லாகிரியில் தர்ம ராஜன் மிதந்து கொண்டிருந்தான். நினைக்க நினைக்க அவளுடைய துணிச்சல் துணுக் குற்ற மன அலைகள் படிப்படியாகத் துணிந்து-முதலைப் பிடியில் அகப்பட்டுக்கொண்ட-ஒரு அபலையின் அபயக் குரலின் தவிப்புக்குப் பாய்ந்தன. "என்னை இங்கிருந்து அழைச்சுண்டு போயிடுங் களேன்!' என்ன அர்த்தம்? என்னை யாரேனும் காப்பாற்றுங்களேன்! வேறு என்ன அர்த்தம்? சமுதாயப் பார்வை உண்மையில் சந்தேகப் பார்வை. சுயநலப் பார்வை. தனக்குப் புரியாததைத் தனக்கு ஒவ்வாததாகப் பார்க்கும் நான் ஒரு சமுதாய உற்பத்திதானே; அபூர்வ மாக, மனசாகூவி ஜெயிக்காவிட்டால் அதன் படிமத்தின் பாதிப்பு என்னைத் தன்னிலிருந்து தப்ப விடுமா? கூடவே தன் வாழ்க்கையின் அவலமும் நெஞ்சில் புதி தாக உரைக்கத் தலைப்பட்டது. ஆமாம் இது என்ன பிழைப்பு? ஊர் ஊராக கற்றிக் கொண்டு, படிப்படியாக ஏறிக்கொண்டு எவனோ ஒருவன் உற்பத்தி செய்த சோப்பை-இன்று சோப்பு,