பக்கம்:பிராயச்சித்தம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 லா. ச. ராமாமிருதம் செலவு தப்பித்தது. இரு தரப்பிலுமே சுற்றம் உறவு சூழ், இல்லாதது நல்லதாப்போச்சு. தர்மராஜன் சுபாவத் திலேயே சிக்கனம். ஆகையால் இந்த நீண்ட தேனிலவை யும் சமாளிக்க முடிந்தது. ஆனால் அவள் உண்டான பின், ஒரு கட்டத்தில் இந்த முகாம் வாழ்க்கை முற்றுப்புள்ளி காணக் கட்டாயம் வந்து விட்டது. தான் வேலை செய்யும் ஸ்தாபனத்தின் தலைமைக் காரி யாலயம் இருந்த இடத்தில் வீடு பார்த்துக் குடியேறி அக்கம்பக்கத்தாரை நைச்சியம் கட்டிக்கொண்டு, அவர் களைத் துணை வைத்துவிட்டு தர்மராஜன் தன் வேலையில் முனைந்தான். பொருளாதார நிலையை சரி பண்ணிக் கொள்ளும் அவசியம். பிரசவ காலம் நெருங்கினதும்- தாய்வீடு போக அறவே மறுத்துவிட்டாள். தர்மராஜன் ஒரு மாதம் ரஜா எடுத்துக்கொண்டான். தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடந்து பத்து நாட்களானதும் தாயும் குழந்தை யும் வீடு திரும்பினர். எதிர் வீடு, அண்டை வீட்டில் பாட்டிமார்களிடம் யோசனை கேட்டுக்கொண்டு, அவர் களிடம் அவ்வப்போது சரீர உதவியும் வாங்கிக்கொண்டு, பத்தியம் போட்டு தர்மராஜன் தாயுமானவன் ஆனான். வென்னீர் வைத்து குழந்தையை முழங்காலில் போட்டுக் கொண்டு குளிப்பாட்டினதும் உண்டு. இதில் என்ன ஆச்சர்யம்? அவசியம் நேர்ந்தால்தானே எல்லாம் தெரிய வரும் ஸ்வாமி என்று அவனே சொல்வான். அப்படியெல்லாம் அருமை பெருமையுடன் பெற்று வளர்த்த மதுமதி பெயர் வைத்தது மரகதம்தான். அவளுக்கு எப்படி இந்தப் பெயர் கிடைத்தது? புதுமை, மிருக்கிறது. நன்னாகவும் இருக்கிறது. இல்லை?