பக்கம்:பிராயச்சித்தம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 105 மரகதமும் அந்த ஒரு மாதத்தில் தன் காரியத்தைத் தானே பார்த்துக் கொள்ளுமளவுக்குத் தேறிவிட்டாள். நாட்டுக் கட்.ை தர்மராஜன் உத்யோகத்துக்கு மீண்டான். தனியார் ஸ்தாபனம். சலுகைகள் அதிகம் எதிர்ப்பார்ப்பதற்கில்லை. குறிப்பிட்ட டார்ஜெட்டுக்கு பிஸினெஸ் காண்பித்தா கணும். இந்த லைனில் எப்பவுமே போட்டிதான். இடத் தைக் கோட்டை விட்டால் மறுபடியும் ஒடிப் பிடிப்ப தென்பது சுலபமன்று. - மாதம் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையுடன் அபூர் வமாக விடுமுறை நாள் ஒன்றும் சேர்ந்தால் தர்மராஜன் வீட்டுக்கு வந்துவிடுவான். ஒவ்வொரு தடவையும் குழந்தையின் வளர்ச்சி பளிச்செனத் தெரிந்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்று சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள்? தாயும் மேனி மினுத்தாள். உத்யோக ரீதியிலும் அப்போது தர்மராஜனுக்குப் பொற்காலம். £rg ஆடவர்கள மனதை மதுமத பிளக்கப் போகிறாள் என்று அவளுடைய பன்னிரெண்டு, பதிமூன்று வயதி லேயே தெரிந்துவிட்டது. பள்ளிப் பாடங்களில் சுட்டி. ஆனால் பாட்டுக்குக் குரல் இல்லை. நடனத்தில் அவள் மனம் ஊன்றியது. அதனால் என்ன? குழந்தை இன்னும் நாலைந்து வருடங்களுக்கு அவள் இஷ்டப்படி திளைத்துவிட்டுப் போகிறாள் என்கிற எண்ணத்தில் டான்ஸ் க்ளாசிற்கு மது அனுப்பப்பட்டாள். அங்கு பாடங்களை வெகு சீக்கிரமே அவள் விழுங்கின. பிறகு புகழ் பெற்ற நடன ஆசிரியரிடம் பிரத்யேகமாக பயில ஆரம்பித்தாள். oேstly