பக்கம்:பிராயச்சித்தம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 லா. ச. ராமாமிருதம் விற்பனை காண்பிக்கும் வரை, அதற்கப்புறமும் அன்றாட புழக்கத்துக்கு ரொக்கத்துக்குக் கவலையில்லாமல் இருப்பது எப்படி, மாதச் சம்பளக்காரன், சம்பளம் கரைத்துபோன பின், அடுத்த முதல் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருப் பது எப்படி? தவிர மாதச் சம்பளம் அப்படி ஒன்றும் தூக்கிக் கொடுத்து விடாது. பல்லைக் கடித்துக்கொண்டு தர்மராஜனுக்கு சிரம திசை. அவன் ஊரோடு வந்து சேர்ந்து விட்டதற்கு அவர்கள் கிணுங்கவில்லை. ஆச்சர்யப்படக்கூட இல்லை. அத்தியாவசியம் தவிர பேச்சு விட்டுப் போச்சு. சந்தேகம் புதுவிதமாகப் பிடுங்கித் தின்றது. ஆமாம், நான் காலை ஆபீசுக்குப் போய், மாலை திரும்பி வரும்வரை இவர்களைக் கட்டிப் பிடிப்பவர் யார்? தனக்குத் தன் காவல் இல்லாதவரை என் அடைகாவல் என்ன செய்யும்? இவர் நாள் பூரா போலீஸ் பண்ணுவதென்றால் அது ஆகிற காரியமா? அதுவே எனக்கு அசிங்கமில்லையா? "நீதான் விட்டுப் பிடிக்கனும் உள்ளே குரல் எழும்பிற்று. 'எதை இவர்கள் சினிமாப் பித்துப் பிடித்துப் படுகுழி நோக்கிப் போவதையா?” நடனம் ஆடுகிறவர்கள் எல்லோருமே சினிமா ஸ்டார் ஆகி விடுகிறார்களா? சங்கீத மேடை கெளரவமாக இருக் கிறது திரை மேடை அவமானமாப் போச்சாக்கும். கலை என்றால் எல்லாமே கலைதான். சங்கீதம், நடனம், நாடகம். சினிமா. தன்னைத்தானே தான் கேலி செய்கை யில் ஆத்திரம் பொங்கிற்று. மனிதன் தவித்தான். கவலை யால் இளைத்தான்.