பக்கம்:பிராயச்சித்தம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 113 ஞாயிறு, விடுமுறைகளில் அல்லது சில சமயங்கள் மாலை ஆபீசிலிருந்து திரும்பினால், கூடத்தில் மரகதம் உட்கார்ந்துகொண்டு, தரைமேல் ரூல்கட்டையால் தட்ட, மது ஆடிக் கொண்டிருப்பாள். முதலில் சிரிப்பு வந்தது. அப்புறம் எரிச்சல் பொறுக்க முடியாமல் கூப்பிட்டு விசாரித்தபோது, "ஆமாம் அப்படித்தான். இத்தனை நாள் கஷ்டப் பட்டுக் கத்துண்டது மறந்து போகாமல் இருக்க நீங்கள் தான் காலில் விலங்கு பூட்டியாச்சே. விலங்கோடு ஆடறாள். நீங்கள் விலங்கைப் பூட்டினப்புறம் நாங்கள் எப்படிப் போனால், உங்களுக்கென்ன?” அப்புறம் அது என்ன சினிமாவைப்பற்றி அப்படி ஒரு பேச்சோ? உட்கார்ந்தால் மரகதத்தைச்சுற்றி வெறும் சினிமாப் பத்திரிகைகள்தான். இவர்களுக்கு யார் இப்படி ஸப்ளை பண்ணுகிறார்கள்? சினிமா நடிகன் நடிகை களைப் பற்றிப் பேச்சுதான். இது என்ன சினிமா பராயணம் வீடு உருப்படுமா? என்று கடிந்தபோது, காத்திருந்தாற்போல் பதில் வந்தது. பதில்கள் எல்லாம் மரகதம்தான். 'நன்னாயிருக்கு கார்வார் வாய்ப்பூட்டு வேறே யாக்கும்! நீங்கள் எந்தக் காலத்தில் இருக்கேன்? நாக்கை சுடறது, கண்ணைக்குத்திப் பொட்டையாக்கறது, அதெல் லாம் உங்கள் அம்மா காலத்தோடு போக்க. அப்படித்தான் எங்களுக்கு இஷ்டப்பட்டதைப் பேசுவோம். உங்களால் முடிஞ்சால் மனசின் மூடியையே திறந்து பார்ப்பேன். அதன் உலையைக் கண்டேள், பயந்தே போயிடுவேன். வேணுமென்றே சீண்டுகிறார்கள். எதற்கோ தயா ராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளும் இரு நாள் வந்தது. பி.-8