பக்கம்:பிராயச்சித்தம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 லா. ச. ராமாமிருதம் பிற்பகல் ஒரு போன் வந்தது. எடுத்துக் கேட்டார் யாரது? தர்மராஜன் ஹியர் , 'பாவம் தர்மராஜன்! உடனேயே அந்தப் பக்கம் போன் அறுந்தது. ஒன்றும் புரியவில்லை. புரியாமலும் இல்லை. என்ன தோன்றிற்றோ. வீட்டுக்கு வாசற்கதவில் பூட்டு தொங்கிற்று. அக்கம் பக்கம் கேட்டதில் பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்தார்கள். மாமி இதைக் கொடுக்கச் சொன்னாள். மாமியும் மதுவும் ஆளுக்கு ஒரு கைப்பெட்டியோடு ஆட்டோ ஏறிப்போனா. இப்பத்தான் அரை மணி ஆச்சு, ' வந்த உடனே கண்ணில் படும்படியாக, சோபா செட் நடுவே டிபாயின் மேலே கனம் வைத்து ஒரு கடிதம். "எங்களைத் தேட வேண்டாம் நகை நட்டு எதையும் தேட வேண்டாம். நீங்கள் போட்டதானாலும் எங்க ளுடையதுதானே? பாங்கியிலிருந்த பணத்தை எடுத் துண்டு போறோம். என் பேரையும் சேர்த்து நீங்கள் க ைக்கு வெச்சது செளகர்யமாப் போச்சு. மதுவின் எதிர் காலத்தை நிறக்கப் பண்றது எப்படின்னு எனக்குத் தெரியும். அவளுடைய பேரையும் புகழையும் நான் எழுதி தெரிஞ்சுக்க இருக்காது. பத்திரிகையிலேயே கண்டுப்பேள். அவளுடைய ஸ்டார் சரக்கு உங்களிடம் குட்டிச்சுவரா யிடும்னு தெரிஞ்சுபோனதால் சொல்லிக்காம போனோம். இப்படி நாங்கள் போறதுக்கும் நீங்கள்தான் காரணம், பொறுப்பு.’’ - தர்மராஜன் மின் விசிறியைப் போட்டுவிட்டு சோபா வில் அமர்ந்தார். ஒரு பெருமூச்சு. அப்பாடி மூச்சு இனி