பக்கம்:பிராயச்சித்தம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 குற்றவாளி தன் குற்ற உணர்வினாலேயே தூண்டப் பட்டு, தான் குற்றம் இழைத்த இடத்தையே திரும்பத் திரும்பச் சுற்றி வருவான் என்று மனோதத்துவ ரீதிப்படி ஒரு கோட்பாடு உண்டு. தர்மராஜன் இப்போது அந்த வீட்டுக்கெதிரே நின்ற படி அதைச் சிந்திக்கையில், வீடு அடையாளமே மாறி விட்டிருந்தது. மாடிக்கு மேல் மாடி. புதுப் பெயிண்ட், வீட்டின் முன்பிலேயே ஒரு துடிப்பு தெரிந்தது. மனக் சந்த் நர்ஸிங் ஹோம்’ என்று நாஸ்"க்கான எழுத்துக்களில் பெயர் புதைத்திராவிட்டால் இடம் புரியாமல் தர்மராஜன் நகர்ந்திருப்பார். வாசலில் ஒரு கார் நின்றது. பெரும் ஆவலால் தாண்டப்பெற்று உள்ளே நுழைந்: தார். உட்புறமாக உட்கார்ந்திருந்த செளக்கிதார் எழுந்து நின்று ஸெல்யூட் அடித்தான். தர்மராஜன் திறுதிறுவென்று சுற்றும் முற்றும் நோக்கினார். பெரிய நீண்ட தறிகளில் ஆட்கள் எம்பிராய்டரி வேலை செய்துகொண்டிருந்த கூடங்கள் இரண்டும் கண்ணிலேயே படவில்லை. குறுக்கே சுவர் விழுந்து உள் வாசலில் திரை தொங்கிற்று.