பக்கம்:பிராயச்சித்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 7 ‘காணாமல் போயிடுத்தா? எப்போ?' 'நடந்ததெல்லாம் நடப்பதற்கு முன்னால்.’ மறுபடியும் அந்தப் புன்னகை அவளை வாயடைக்கும் புன்னகை. ஸெர்வர் வத்து டிபனோடு தட்டுகளை வைத்து விட் டுப் போனான். திடீரென்று கண்டுவிட்ட பசிக்கு ஆச்சர்யப்படக்கூட நேரமில்லை. அத்தனை பசி. பூரியைக் கிழித்துத் தின்ன ஆரம்பித்தாள். ஆனால் அவரிடம் அந்த அவசரமில்லை. என்றைக் குமே மனிதரின் நாசூக்கு அவரைத் துறந்ததில்லை. இரண்டு விரல் நுனிகளால் சின்னதாக விண்ட விள்ளலால், கிழங்கை ஒற்றியெடுத்தார். 'கோமதி செளக்யமாகயிருக்கையா?” ろ 'எந்த அர்த்தத்தில் கேட்கிறீர்கள்?’ ஒரு முழுங்கு தண்ணிரைக் குடித்துவிட்டு, மீண்டும் உண்டியைத் தாக்கினாள். "சாதாரணமாக என்ன அர்த்தமோ, அப்படித்தான் கேட்கிறேன்.' "நாம் சிலம்பம் விளையாட வேண்டாம் ஸ்ார்.' அவள் விழிகள் நிறைந்தன. "என்ன கோமதி, நீயா எதையோ நினைத்துக் ண்டு, குழாயைத் திருப்பி விட்டுக்கொண்டே... சே, அதுத்கில்லே லார், உங்களைப் பார்த்து இன்னும் நார்மல் ஆகல்லே. ஆகவும் மாட்டேனோ என்னவோ? சரி அது இருக்கட்டும். உங்கள் கேள்விக்குப் பதில். வேலையில் ஒரு சின்னப் பதவி உயர்வு, அதற்கு allowance, இந்த மூணு வருஷங்களில் grade movement, எல்லாம் சேர்ந்து ஏறக்குறைய இரண்டாயிரம் Clear பண்றேன் லார்.’