பக்கம்:பிராயச்சித்தம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 127 'சாச்சா உயிலோடு சேர்த்து ஒரு கடிதாசி எளுதியிருக் காரு. அதிலே உங்களை சொல்றார் நீங்கள் அஞ்ஞாத வாஸ் அர்ஜூன். நீங்கள் அவருடைய ப்ரதர்- இப்படி யெல்லாம் எளுதியிருக்காரு. அவர் எப்படி அப்படி ஒரே அடியா bowl over ஆயிட்டார் தெரியல்லே. ஆன. சாச்சா ஒரு Pecular man. அவர் உங்களிடம் சொன்னாரா? அவருடைய சம்சாரம் சின்ன வயசிலேயே முதல் டெலிவரி யிலேயே இறந்துட்டாங்க. குளந்தையும் போயிடிச்சி. இந்த ஆஸ்பத்திரி ஐடியாவுக்கு அவர் வாழ்க்கையில் அந்த சம்பவம்தான் காரணம். சாச்சா அப்புறம் கலியாணம் செய்யவேயில்லே. அதென்ன ஆண்களுக்கு ஒரு நாயம், பெண்களுக்கு ஒரு நியாயம்? அவங்களுக்கு ஏக் பதின்னா எனக்கு ஏக் பத்ணின்னு பிடிவாதமா இருந்துட்டாரு. எப்படியிருந்தாரோ? "என்னைப் பாருங்க. எனக்கு ஏளு கொளந்தைங்க. நாலு ஆம்புள்ளேப் பசங்க. மூணு பொம்புள்ளேப் பசங்க. GT ill-fraugis Carrying. இது மாசம். அதனாலதான் நான் இந்தியா வந்திருக்கேன். எட்டாவது புள்ளையாப் புறக்கக் கூடாதேன்னு கவலையாயிருக்காங்க. என் சம் சாரத்துக்கு நாலு ப்ரதர்ஸ். பொண்ணாத்தான் பொறக் கணும்னு கட்டாயமா இருக்காங்க. ஆனால் நம் இஸ்டத் திலியா இருக்குது? உதட்டைப் பிதுக்கினான். கூடவே £airsogotá Guðeliq oriri. “But the flesh is weak.” எல்லாரும் சாச்சாவாக முடியுமா? அதனாலேயே எனக்கு சாச்சா மேலே மரியாதை, அவர் இஸ்டப்படி நடக் கணும்னு ஒரு பயம்கூட. நானே பேசிகிட்டிருக்கேன். என்ன காரியமா வந்தீங்க? உங்களுக்கு நான் என்ன செய்ய? உங்கள் பெண் in the family way? ஏன் தூக்கிப் Gurr@gi? Any other trouble? Don't worry, o iš GEIGŠG treatment இலவசம். சாச்சா இஸ்டம் அப்படித்தான் இருக்கும்.'