பக்கம்:பிராயச்சித்தம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 லா. ச. ராமாமிருதம் "என்ன இவ்வளவு weak feeling ஆசாமி, நீங்களா குற்றம் செய்திருப்பீங்க?’ சிரித்தான். மிஸ்டர் கோபிசந்த்'-இடைமறித்தான். இது சாச்சா இஸ்டம் அதை நிறைவேத்தறேன். எனக்கென்ன கணக்கிலே ஏறப்போவுது.' "மிஸ்டர் கோபிசந்த், உங்கள் பிரியம் கொடுத்த துணிச்சல்லே பேசறேன். எனக்கு வேலை வேணும், அக்கெளண்ட்ஸ் எழுதுவேன், பார்த்துக் கொள்வேன். இங்கே இந்த ஹாஸ்பிடல்லேயே என்னுடைய back இround இலே இங்கேயே நான் வேலை கேட்பது தப்பாவு மிருக்கலாம். ஆனால் எனக்கு வேறு வழியும் இல்லை. மனக்சந்த் ஸர்க்கார் என்னை நடத்திய விதத்துக்கு என்னுடைய பரிகாரம் பிராயச்சித்தமாயிருந்தாலும் இருக்கட்டும்.’’ அவன் தன் மீசை முனையை யோசனையாகத் திருகிக் கொண்டே நீங்கள் இப்படிக் கேக்கறதே சாச்சாவோட இஷ்டமாயிருக்கலாம். யார் கண் - து? சாச்சாவின் இஷ்டத்துக்கு மாறாகப் போகக் கூடாது. எனக்கும் ஒரு ஆள் தேவைப்படுது. இரு பதினைந்து நாள் பொறுத்து இத்து. நிச்சயமா வந்து பாருங்க. ஏதாச்சும் ஏற்பாடு செய்வோம்.' மனக்சந்த் ஸ்ர்க்கார் படத்திலிருந்து சிரித்தார், பழிவாங்குவதில் இது ஒரு தினுசு, இன்னா செய்தாரை ஒறுத்தல்..." 岑 . 黎 ” 密 மனக்சந்த் வீட்டுக்குப் போனதால் ஏதோ துலக்கம் தெரிந்த மாதிரியிருந்ததே. அது என்ன? கடனைத் திருப்பிக் கேட்க முடியாது. கோமதிக்கு என்னால் என்ன சஹாயம்