பக்கம்:பிராயச்சித்தம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 135 'செளக்யமா ஸ்ார்? அவன் சுற்றுமுற்று நாற்காலி தேடி, காணாமல் எதிரே தரைமேல் சப்பணமாக உட்கார்ந்தான். 'நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?' புன்னகை புரிந்தார். "என்ன என்னை நீங்கள்" என்கிறீர்கள்! கோமதி வா’ போ’ ஆனால் நானும் உங்களுக்கு அப்படித் தானே?"

    • Thank you.'"

பேசிண்டு இருங்கோ காப்பி போடறேன். ' கோமதி உள்ளே போனாள். 'ஸார். ஒன்று சொல்லட்டுமா? நீங்கள் நல்லாயிருக் கீங்க தலை மயிர் இன்னும் அடர்த்தியா இருக்குதே! என் வயதுக்கு நான் எப்படி ஆயிட்டேன் பாருங்க. ' ஆமாம், விழியோரங்களில் சுருக்கம் விழுந்திருந்தது. கன்னங்கள் தளர ஆரம்பித்து விட்டன. தலை மயிரின் பின் வாங்கலில் நெற்றிமேடு உயர்ந்து அகலமாகிக் கொண்டிருந்தது. அப்படியும் அந்த ஆளிடம் ஒரு வசீகரம். நல்ல சிவப்பு. முகத்தின் இறுக்கம் தளர்ந்து போனதால், முகம் ஒரு முகமூடி உணர்வைத் துரண்டியது. வெட்கத்தில் சிவப்பாகிவிட்ட முகத்தை தர்மராஜன் துடைத்துக் கொண்டார். நாம் அழகைப் பற்றிப் பேசிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்களே?" "ஆனால் அதிலும் கோமதி wanting." *ன் தில், அழகிலா?' "ஐயையோ அவள் காதில் விழப் போறது. பொய்க் கிலியில் அவன் பதுங்கினான். 'l mear கோமதிக்கு அழகு பண்ணிக்கொள்வதில் அக்கறையில்லை."