பக்கம்:பிராயச்சித்தம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 லா, ச. ராமாமிருதம் ‘என்ன சொல்விட்டிருக்கேள்?’ கேட்டுக் கொண்டே கோமதி சமையலறையிலிருந்து வந்தாள் "ஒண்ணுமில்லே. கோமதி தன் appearance லே கவனம் செலுத்தறதில்ல்ே... கொஞ்சம் மேக்-அப் பண்ணிண் டால் தூக்கி அடிச்சுடு வாள் என்கிறேன்.' - . 'மத்ததெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத் தூக்கி மனையில் வை திரும்பவும் கோமதி சமையலறைக்குள் விரைந்தாள், "நான் சொன்னது சரியாப் போச்சா, பார்த்தேளா?" தர்மராஜன் சமாதானப்படுத்துகிற மாதிரி கோமதி வேலையில் கெட்டிக்காரி, மிகவும் நல்ல பெண் .' 'ஆனால் மூக்குக்குமேல் அடிக்கடி கோபம்'-- :ు தர்மராஜன் முறுவலித்தார். "யாருக்குக் கோபம் வர வில்லை? அவளுக்குச் சிரமங்கள் கூடத்தான், இல்லையா?” அவள் கணவன் தயங்கி, தக்க பதிலுக்குத் தேடிக் கொண்டிருக்கையில் கோமதி இரண்டு கைகளிலும் ஒரு தட்டை ஏந்திக்கொண்டு வந்தாள். ட்ரேயில் மூன்று தட்டுகளும் மூன்று காப்பிகளும். ஆளுக்கொரு தட்டைக் கொடுத்துவிட்டு அவளும் உட் கார்த்தாள். "ப்ரலாந்த்?" "போணியே அவன்தான். இன்னிக்கு டிபன் வரும் போதே கடையில் வாங்கி வந்துட்டேன். 'சும்மா லைட்டா Snacks. ராத்திரி சமையலை விவரமா வெச்சுப்போம்.' "போம்னா என்ன அர்த்தம்? மாமாவும் சேர்ந்து பண்ணப் போறாரா?” “Shut up!”