பக்கம்:பிராயச்சித்தம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 லா ச. ராமாமிருதம் 'இல்லை நான் பிழைச்சேன் பிழைச்சமட்டுக்கும்...' அவள் கண்கள் கொதித்தன. (ஏன் இவ்வளவு கொடுமையாகப் பேசுகிறாள்? இவன் ஏன் இத்தனையும் கேட்டுக் கொள்கிறான்? இவர்கள் ஏன் என்னை சாrதிப்படுத்துகிறார்கள்?) 'இவள் கோபத்தைப் பார்த்தேளா ஸ்ார்? நான் என்ன சொன்னேன்? ஆனால் நீங்கள் சொன்னமாதிரி கோமதி நல்ல பெண். வெகுளி, அவ்வளவுதான். சுபா வத்தை மாற்ற முடியுமா? எல்லாரும் ஒரு குணமாயிருந் தால் அப்புறம் வாழ்க்கையே எதற்கு? ஆனால் கோமதி நீயே பார்க்கப் போறே. என் காலம் இப்படியே இருக் காது. ஒரு நியூமராலஜிஸ்ட் இன்னிக்கு சொன்னான். என் அதிர்ஷ்ட எண்ணிற்கு ஏற்றபடி-என் பேரிலே ஒரு சின்ன change பண்ணிட்டேன்னா-ஒரு N சேர்க்கணு மாம். எ ப் ப டி சேர்க்கறதுன்னுதான் யோசிச்சின் டிருக்கேன்... அப்புறம் கூரையைப் பிச்சுக்கப் போறது.' 'அந்த நாள் வந்தால் அதற்கு நீங்கள் ஒண்டிதான் சாகதியாயிருக்கப் போறேள்.' .3 * * * ہٹلر ہی مجبر میسر مج گ ஏன் நீ பார்க்கமாட்டியா? கண்ணை மூடிண்டிடு வையா?* "ஆமாம். ஒரேயடியா மறுபடி திறக்காது. ஏன் இந்த வெட்டிப் பேச்சு? நான் என் வேலையைப் பார்க் கிறேன்." அவள் போனபிறகு மோனத்தை அவன்தான் கலைத் தான். 'அவளைச் சொல்லிக் குற்றமில்லை. அவளுக்கு நான் சரியாயில்லை."