பக்கம்:பிராயச்சித்தம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வா. ச. ராமாமிருதம் சமையலில் சேர்த்தியாயில்லை. அதென்னவோ மனுஷா ளுக்கு அப்படி ஒரு பழக்கமாகி விட்டது. Sily. பீன்ஸ் இல்லையா, காரட் இல்லையா, ஏன் வாழைக்காய் வதக்கல் எந்த விதத்தில் உருளைக்குக் குறைச்சல்? 'கோமதி நீ இப்படிப் பேசினால் புருஷன் பெண்சாதி விஷயம் தலையிட வேண்டாம் என்றுதான் அர்த்தம்." "லாரி ஸார், ஸ்ார் சொல்லனுமா ஸார்?' சிரித்தாள். அந்த சிரிப்பில்தான் எத்தனை துக்கம்? தன் ஏளனம்! கூடவே உள்ளோடும் ஒரு அச்சச்சரடு Hysteria? கோமதி ப்ளீஸ்...!" 'ஸார் என் நிம்மதியைக் கெடுக்க இங்கே யார் வரச் சொன்னது. தெருமுனையில் திருட்டு முழியை முழிச்சுண்டு காத்திருக்கான். லாரி-உங்களுக்காக-காத்திருக்கார்-' 'இதோ பார் கோமதி.' "கொஞ்சம் எனக்கு செவி கொடுங்கள். அப்புறம் நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லுங்கோ. ஆனால் எதுவும் என் காது வாங்கிக்கப் போறதில்லை. இவர் விஷயத்தில் எனக்குக் காது என்ன, மூளையே வாங்கிக் கொள்ள மறுக்கிறது. லார் நான் ரொம்பப் பட்டு விட்டேன். இந்த மனுஷன் உண்மையில் மாஞ்செடி முளைக்கச் செய்யறமாதிரி, ஒரே நிமிஷத்தில் திருந்தினால் கூட நான் நம்புவது, இவரை ஏற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம். இனி நீங்கள் என்னைத் திட்டுங்கள். காத்துக்கொண்டிருக்கேன். ' அவர் வேறு பேசவில்லை. தரைமேல் குனிந்த தலை யுடன் தன்னிடத்துக்குத் திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டார்.