பக்கம்:பிராயச்சித்தம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 143 பேய்க்குணம். அவள் தாயாயிருத்தால்கூட, பேயின் மூர்க்க மில்லாமல் சேயை அதன் வயிற்றுள் பருவத்திலிருந்தே தாங்க முடியுமா, காப்பாற்ற முடியுமா? போதும் போதும் நான் பேய்களிடம் பட்டபாடு. தாய்ப்பேய், சேய்ப்பேய். 'ரஸ்ம் டாப்ஸ்' அவன் கையில் ஏந்தி உறிஞ்சி னான்; அதனால் சாம்பார் தரம் குறைவு என்று அர்த்த மில்லே. முருங்கை மரத்தில் ஏறிக்காதே." "ஆமாம், நான் கோவிச்சுண்டு, நீங்கள் பயந்துண்டுபோறுமே!’’ 'இல்லை கோமதி, இப்படி வீட்டுச் சாப்பாடு சாப் பிட்டு எத்தனை நாளாச்சு.' 'உங்களை ஒரு தயவு கேட்டுக்கறேன். குளவிக் கூட்டைக் கலைக்க வேண்டாம். கலத்தில் சாதத்தைப் போட்டுட்டு நான் இப்படிப் பேசக்கூடாது. ஆனால் நீங்கள் ஜாக்கிரதையாயிருக்கறது நல்லது.' விழித்தான். நீங்களே பாருங்கள் ஸார். இப்போ நான் என்ன செய்தேன்?" மோசமான நிலைமை. ப்ரஸாந்த், திடீரென்று கையைத் துக்கிக்கொண்டு "அம்மா என்ன சஸ்பென்ஸ் பண்ணியிருக்கா நேக்குத் தெரியுமே! பால் பாயசம்.' அவ்வளவுதான் கோமதி பொட்டென உடைந்து போனாள், முதுகை முறிக்கும் கடைசி சுள்ளியாக ப்ரஸாந்தின் கொக்கரிப்பு முடிந்தது. அலமாரி விளிம்பில் முகத்தைப் பதித்துக்கொண்டு விக்கி விக்கி அழுதாள். அப்புறம் தன் நினைப்பு வந்து வேகமாக வெளியே சென்றாள், மீண்டாள்.