பக்கம்:பிராயச்சித்தம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 லா.ச. ராமாமிருதம் சாப்பாடு ஒரு வழியாக முடிந்து மூவரும் எழுந்தனர். கோமதி முகத்தைத் தூக்கிக்கொண்டு அவ்வப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டு, காரியங்களைக் கவனித்தாள். சற்று நேரம் கழித்து, கோமதி, தட்டில் மூன்று கோப்பைகளுடன் வந்தாள். சிரிக்க முயன்றாள். முகம் மழை காலத்து அழிந்த நிலாப்போல் இருந்தது. art sorry கோமதி, ஆனால் எதற்குன்னுதான் தெரியல்லே' என்றான். 'உங்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் பாயஸ்த்தைப் பண்ணிட்டு அதைக் கசக்க அடிச்சுட்டேன். தப்பு என்மேல்தான்.' 'கசப்பா, யார் சொன்னது? தெய்வீகமா அல்லவா இருக்கு!-கோமதி வரியா, கொஞ்சம் தனியாப் பேசணும்.' 'இந்தப் பாயலம் எப்படிப் பண்றது என்கிறதைப் பத்தியா? ' சிரித்தான். 'பார்த்தேனா ஸ்ார்? இஷ்டப்பட்டால் இவளால் எப்படி ஜோக் அடிக்க முடிகிறது! ஆனால் பாயஸ்த்தைப்பற்றி இல்லை.' 'எதைப்பற்றி என்றும் எனக்குத் தெரியும். நம்மிடை யில் இனி தனி என்பதே கிடையாது. எல்லாம் தடுக்கூடத் தில் உடைச்சுடுவேன். காலைச் சுற்றின பாம்பு, சரி, எவ்வளவு?' அவனும் தயங்காமல். "ஐம்பது.” அவள் பதில் பேசாது விர்ரென்று போய், அலமாரி யைத் திறந்து மூடி, சாவியை அதில் திருப்பிவிட்டு,