பக்கம்:பிராயச்சித்தம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 345 திரும்பி வந்து அவன் கையில் திணித்தாள். இரண்டு ஐந்துகள் கீழே விழுந்தன. அவன் குனிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டான். தர்மராஜன் கண்களை மூடிக் கொண்டார். மறு படியும் கண்கள் திறந்தபோது, அவன் சிரித்தபடி, நோட்டுக்களை எண்ணிக்கொண்டே, கோமதி, இப்போ உன் கை ஓங்கியிருக்கலாம்; ஆனால் காலம் இப்படியே இருக்கும் என்று எண்ணாதே!’ 'நானும் நாட்களை எண்ணிண்டுதாணிருக்கேன்!' 'ஒ: ஏனாம்? அலட்சியமாக, கேலியாக, "விவாகரத்துக்கு." ஊசி கேட்கும். "ஆமாம், இதே மூடுசூளையில் எத்தனை தாள்? நானும் காலண்டரைப் பார்த்திண்டு தானிருக்கேன். இன்னும் 156 நாட்கள்.' 'கோமதி, நன்னா யோசனை பண்ணினையா?” அவன் குரலில் கவலை தெரிந்தது. தனக்காக இல்லை அவளுக்காக. 'இதுவரை இரண்டு வருடங்கள், 209 நாட்கள் யோசனைக்குப் போறாதா? மிச்சம் 156 நாட்கள் உங்க ளுக்கு யோசனைக்கு. அதனால் நேரமாயிடுத்து கோமதி, இன்னிக்கு மட்டும் ராத்தங்கிட்டுப் போறேன்"னு: ஏதானும் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம். நீங்கள் வந்த காரியம் முடிஞ்சதா, புறப்படுங்கள், ஊ...ம்: ' காளி. அவன் பதில் பேசவில்லை. பி.-10