பக்கம்:பிராயச்சித்தம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 147 "இருக்கலாம்-அடேயப்பா, என்ன வெய்யில்: எங்கேனும் ஒதுங்கலாமா? நீங்கள் ஏன் எனக்குக் காப்பி வாங்கித்தரக் கூடாது?’’ 'ஏன், கொடுப்பது என்பது உன் பழக்கத்தில் கிடையாதா?’’ 'ஓ, அப்படியும் செய்யலாமே! மாருதி ஸ்பெஷல்' சாப்பிட்டிருக்கேளா? இந்த வட்டாரத்தில் பிரசித் தம். அடுத்த தெருவுதான்.' ராrஸ் ஹோட்டல். ராக்ஷஸ்க் கூட்டம். 'A.C.க்குப் போயிடுவோம்’ முன்னால் நடந்தான். 'கோமதியின் பணம் எ ல் லாம் இப்படித்தான் போகனுமா? அவருக்குக் கடுப்பாய்த்தானிருந்தது. சரியாப் போச்சு, கோமதிக்குக் கொடுத்தது எதற்குக் காணும்னு நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவளிடம் வாங்கிக்கொள்வது ஒரு கொள்கை, அவ்வளவுதான்.

  • என்ன கொள்கை?"

"ஒரு மாதம் வாங்கத் தவறினால், மறு மாதத்துக்கு ஏன் கொடுக்கணும்னு தோன்றிவிடும்.' "உன் பேச்சு தலைகீழ்ப் பாடமாக உனக்குத் தோன வில்லை.” "அவரவர் பார்வையைப் பொறுத்தது. என் கஷ்டம் அறிந்தவர்கள் சொல்லமாட்டார்கள். என்ன சாப், பிடறேள்?’’ "எனக்கு எதுவுமே வேண்டாம். 器瑟 "அப்படிச் சொன்னால் ஆகுமா? நாம் பேசுவதற்கு இருக்கிறதே! அப்பா, எனக்குப் பூரிமசால், ஸாருக்குக் காப்பி-பெஸ்டா இருக்கனும், என்ன?"