பக்கம்:பிராயச்சித்தம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 லா. ச. ராமாமிருதம் அவன் போனபிறகு அவர்: 'எந்நாளா என்னை வேவு? தெரிந்துகொள் நன். 舜莎 - "சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னால், நீங்கள், ஒரு மாலை எங்கள் வீட்டுள் நுழைவதைப் பார்த்தேன்." "நான்தான் என்று உனக்கு எப்படித் தெரியும்?" 'எனக்கும் முதலில் குழப்பமாத்தானிருந்தது. ஆனால் கோமதி உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவாள். உங்களை வர்ணித்திருக்கிறாள். உங்கள் சிவப்பு மேனியையும், தும்பை நரையையும். அப்புறம் எனக்கு ரெண்டும் ரெண்டும் அஞ்சு பண்ணுவது சிரமமாக இல்லே " இே "சரி, என்னைத் தொடருவானேன்? உடனே வந்து பேசவேண்டியதுதானே?’’ "நீங்கள் சொல்றமாதிரி அதெல்லாம் அவ்வளவு சுலப மில்லை, ஸார். ஏற்கெனவே எனக்கும் அவளுக்கும் பூசல். ஆனால் உங்களைத் தினப்படிக் கண்காணிக்க முடிய வில்லை. ஆனால் எனக்கு மனுஷாள் இருக்கா. ஒருநாள் ஒரு கான்ஸ்டேபிள் உங்களை அழைத்துக்கொண்டு போலிஸ் ஸ்டேஷனுள் நுழைந்ததாகச் சொன்னார்கள். சரி, தொடர்வதில் இனிப் பிரயோசனம் இல்லைன்னு நான் தீர்மானம் பண்ணிக் கொள்கையிலேயே அடுத்த நாள் நீங்கள் வீட்டிலிருந்து வெளிவந்ததைக் கண்டேன். சாதாரணமாகத்தானிருந்தீர்கள். சரி அவசரப்பட வேண்டியதில்லை என்று எண்ணிக் கொண்டேன்." 'பரவாயில்லையே, பாரா போலிஸ் பந்தாவுக்குக் குறைச்சல் இல்லாமல் இருக்கிறதே!' அவருடன் சேர்ந்து சிரித்தான். சரி, நாம் பேச இருக்கிறது என்று சொன்னாயே, அப்படிப் பேச என்ன இருக்கிறது? என்ன இருக்க முடியும்?