பக்கம்:பிராயச்சித்தம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் i53 "ஆமாம் இந்தப் பதினஞ்சு தாளில் நீங்கள் கோமதி யிடமே ஏன் நகையைக் கொடுத்திருக்கக் கூடாது?’ அவர் பதில் பேசவில்லை. அதுவும் இதுவரை தோன் றிாததுதான். -'அவளிடம் போய்விட்டால் சிரமந்தான். அவள் பழைய மாதிரி இல்லை. வேறு வழி தேடணும்?" அவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. வேறு என்ன வழி? "ஆனால் அப்படியெல்லாம் போக வேண்டாம்னு பாக்கறேன். ஆனால் அது முழுக்க என் இச்சையில் இருக்குமா? லார், உங்களுக்கு என் கஷ்டம் தெரியாது. இந்த நகையை ஆசை காட்டி பணம் வாங்கியிருக்கேன். நான் சும்மாயிருந்தாலும் அவங்க விடமாட்டாங்க. தலையை விட்டாச்சு-எடுக்க முடியாது. என் பங்குன்னு கேட்கிறேன். ஆனால் அசலாய்க் கண்ணால் பார்த்துக் கையால் நிமிண்டி, ஜே.பியில் போட்டுக்கறபோது, போட்டுக்கறது ஜேபி ஒட்டை வழியா விழுந்துடும். உங்களுக்கு என்ன தெரியும்?' பரிதாபமாயிருந்தான். 'சினிமாவிலும் புத்தகத்திலும்தான் இப்படியெல்லாம் பார்க்கிறோம். 'Sir நீங்களே இப்படிச் சொன்னால் என்ன செய்வது? வாழ்க்கையில் இல்லாதது சினிமாவிலும் ட்ராமாவிலும் புத்தகத்திலும் வந்துவிட முடியாது. உண்மை, கற்பனை யைக் காட்டிலும் விசித்திரமானது. ஸார், சகவாசத்தைத் தேடி ஒருத்தன் போறதில்லே. ஒருத்தன் சனைச்சட் டான்னு தெரிஞ்சு போச்சுன்னா-எப்படியோ தெரிஞ்சும் போவுது-சகவாசம் தானே வந்து அடையும். மாட்டிக் கொண்டபின் தப்பவே முடியாது. சாகப்போற உயிரைத்