பக்கம்:பிராயச்சித்தம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 155 'நினைச்சேன், அப்பவே நினைச்சன் - கண்களில் வெறி. "எப்படி கோமதிக்கு இவ்வளவு துணிச்சல் வந்த துன்னு ஐயா வந்து குந்திட்டிருக்கீங்க. அவளிடம் நகை யும் சேர்ந்துபோச்சு அவளுக்கு உரமும் ஏறிப்போச்சு. என்னெல்லாம் பேசறா! இப்படியெல்லாம் பேசமாட் டான். எரிஞ்சு விழுவாள். இருக்கக் கூடியதுதான். அப்பறம் படிமானத்துக்கு வந்துடுவா. விவாகரத்தாமே! அம்மாடி, ஏன் ஸார் என்னை ரத்து செய்துட்டு, உங்களைக் கலியாணம் செய்துக்கப் போறாளா? தகப்பனா ருக்குத் தகப்பனார், பர்த்தாவுக்குப் பர்த்தா...ஐயோ!' வலிகூடத் தெரியவில்லை. ஏதோ மின்சாரக் கம்பி யைத் தொட்டுவிட்டாற் போலிருந்தது. இல்லை என்ன நேர்ந்ததென்றே தெரியவில்லை. அறையில் மற்றவர்களும் பார்த்திருக்க முடியாது. அவர் கைவிளிம்பு வெட்டு அவ் வளவு வேகமாக விழுந்து மீண்டது. அவன் புஜத்தின் உள் பக்கத்தில் அவ்வளவுதான். கை தொங்கிவிட்டது. அவன் தன் கையைப் பயத்துடன் பார்த்தான். 'இன்னும் ஒன்றரை மணி நேரத்துக்கு உன் கை உனக்கு இல்லே. அவர் குரல் அமைதியாக இருந்தது. 'சிறையிலிருந்தபோது கற்றுக்கொண்டது தற்காப்புக்கு. நான் சும்மாயிருந்தாலும் அவர்கள் சும்மா விடுகிறார் களா? நீ சுவாசம் இழுக்கிற முறையைக் கவனித்து அதன் போக்கில் நரம்பைத் தட்டறது, இது கராத்தே இல்லை யோகாப்யாசத்தைச் சேர்ந்தது. நாராயணா, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதே! இன்னொன்று, நகை' என் னிடம்தான் இருக்கிறது. கோமதியிடம் போகவில்லை. அவளுக்குத் தெரியக்கூடத் தெரியாது. நீ அவளைத் துன் புறுத்த வேண்டாம். எது இருந்தாலும் என்னோடு வைத் துக்கொள்.' - 'கை குடையறது ஸார்!’’