பக்கம்:பிராயச்சித்தம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 லா. ச. ராமாமிருதம் கொள்ள நேரமே கிடையாதா? ஒடிக் கொண்டும் வளையில் எலிபோல் எப்பவும் உடல் வெடவெட என உதறலிலும்-இதற்குத்தான், இதுதான் உயிரா ஏன் இப்படி எனக்கே அவமானச் சின்னமாகி விட்டேன்? தன் மேலேயே ஒரு கோபாவேசம் மூண்டது. போதும் பட்டதெல்லாம் போதும், இதுவே முடிவு. உடலில் ஒரு திடம் கண்டது. எழுந்து படுக்கையைச் சுருட்டி, சுவரோரமாக வைத்தார். வாசற் கதவைப் பூட்டிச் சாவியை விட்டத்தில் சொருகினார். கோமதி யிடம் மறு சாவியிருக்கிறது. இருந்தாலும் இனி எனக்கேன் இது? பையன் வந்தால் வாசலில் விளையாடிக்கொண் டிருக்கட்டும். என் பிரயாணம் பெரிது. நடந்தார். உடனேயே உணர்ந்தார். இதுவரை அறிந்திராத ஒரு அகோரப் பசி. ஆச்சர்யப் பசி. நடந்தார். ஒரு குஜராத்தித் தீனிக்கடை எதிர்ப்பட்டது. வாசலில் கணப்புச் சட்டியில் ('கண கண') பால் 'ஸ்ெட் பண்ணிக் கொண்டிருந்தான். அவ்வளவு பெரிய வாணலியில், விளிம்பு முட்டிய பால். அதன்மேல் சடைத்துக்கொண்டே வரும் ஏடைக் காண அதிசயமாக, புதுமையாக, மகிழ்ச்சி யாக, ஒரு குழந்தைத்தனமாகச் சிரிப்பாய்க்கூட இருந்தது. சில அபூர்வ சமயங்களில் பார்வைக்கு ஒரு சதையுரித்த 'பளிச்’. கண்கள், சுனையில் குளித்த துல்லியம் சித்திரம் கண் திறந்த தனி உயிர்ப்பு.-முதல் விழிப்பு அதெப்படி? உள்ளே போய் உட்கார்ந்து பூரி வரவழைத்தார். சாப்பிட்டுக்கொண்டே- தாலும் புதினாச் சட்னியும் படு ஏர்வை-தெருவில் நடமாட்டத்தைச் சிந்தித்தார். ஆமாம் இத்தனைபேருக்கும் ஏதோ ஒரு காரியமும் நோக்கமும்