பக்கம்:பிராயச்சித்தம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் #59 இருக்கின்றன. எனக்கு மட்டும் ஏன் இல்லை? உலகமே ஒரு அடைப்பாகத் தோன்றுகிறது. காரணம் சிறையி லிருந்த பழக்கமா? குறிக்கோளிழந்த வாழ்வு. திடீரென சம்பந்தமேயில்லாமல், மதுரையைப்பற்றி நினைப்பு வந்தது. பாதி ராத்ரியில், அந்த காலேஜ்ரோடும், பங்கம்மாள் சத்திரம் பக்கத்திலும் இரவைப் பகலாக்கிய வெளிச்சமும், திறந்த கடைகளும்-அந்த இரண்டு இடங்களுமே நித்ய கல்யாண கூடம்தான். வருவோரும் போவோரும்--ரயில் நிலையம், பக்கத்திலே பேருந்து நிலையம். பாதிராத்ரியில் சுடச்சுட இட்லி-நினைத்துப் பார்க்க முடியுமா? அந்த மலைவாழைப்பழக் கடைகளும், 'மதுரை மல்லி! மதுரை மல்லி! அந்தப் பழைய நினைப்பின் வேகத்திலேயே மல்லி மணம் கம்"மென்று இங்கே எழுகிறது, மதுரையின் ஸ்ாரத்தையே வடித்துப் பார்ப்பதுபோல் கற்பனையில் ஒரு உருவமே தோன்றியது. அஜந்தா கொண்டை கடைந்தெடுத்து உடல். செந்தாழை மேனி. மார்க்கச்சை. ரவிவர்மா படத்தில் சகுந்தலை போன்று காலின் கண்டசதை தெரிய கச்சமிட்டக் கட்டு. ரவிக்கை யில்லை. மொழு மொழுவென்று தோள்களின் உருடடு. இடுப்பில் குடத்துடன் மதுரை நகரின் தேவதை நடந்து வருகிறாள். கன்னி அல்லள். கழுத்தில், கொண்டையல் தோள்களில், கை மணிக்கட்டுகளில், கணுக்கால்களில் அணிகளுக்குப் பதில் மல்லிச் சரங்கள், இடையில் ஒட்டி யாணத்துக்குப் பதில் ஒரு மல்லித் திண்டுமாலை. தோற்றம் அதன் மணத்தையும் அதற்காக ஏக்கத்தையும் நெஞ்சில் நிறுத்திவிட்டு நெஞ்சில் தோன்றியபடியே நெஞ்சில் மறைந்தது. முகம் ஏனோ மரகதத்தை நினை வூட்டியது. அந்த நாள் மதுரை.