பக்கம்:பிராயச்சித்தம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வா. ச. ராமாமிருதம் மதுரை--மதுரா-மாதுரி-மதுரி-மரகதம்-மதுமதி --மது-மிது... என் அந்த நாள் வாழ்க்கை போல். பெருமூச்செறிந்தார். என்றுதான் என் வாழ்க்கை வாழ்ந்தது: ஒன்று பூகம்பம். இல்லை, தலைக்குமேல் மயி ரிழையில் தொங்கும் கத்தி. 'துரத் வோனா லாப் ஸ்பெஷல் மலாய்? பஹாத் அச்சா-படாகுவிஹை...' உட்கார்ந்த இடத்திலிருந்தே தெரிந்தது. பாலில் ஏடு முழுக்கப் புடைத்துக்கொண்டு பாலே மதத்திருந்தது, ஆசையாய்த் தானிருந்தது. ஆனால்... ஆனால்... வேறு எவனேனும் வந்து பால் கேட்கத்தான் போகிறான். பாவின் ஆடை கலையத்தான் போகிறது. வியாபாரத் துக்குத்தானே வாணலி பாலும்! ஆனால்-ஆனால்... "டி கொண்டுவாப்பா!' "பம்பாய் ஸ்பெஷல் மஸாலா சாய். நாற்பத்தி எட்டு சரக்குகள் சேர்ந்தது. கலவை. எங்கள் ரஹஸ்யம்; சாப்பிட்டு அச்சா சொல்லுங்கள், அதுதான் எங்கள் சந்தோஷம் சந்தேகம் கேட்காமலே கல்லாவிலிருந்து முதலாளி விளக்குகிறான். சிரிக்கிறான். பான் காவி யேறிய பற்கள் கிருதா மீசையடியில் பளப்பள டி. ருசியாய்த்தானிருந்தது. தெம்பாய்த் தானிருந்தது. நடந்தார். தினத்தின் இரண்டாவது பாகம் இரவு-அது ஒரு தனி உலகம்-என்று அதன் விலாசம் தனியாய்த்தான் தெரி கிறது சினிமா தியேட்டர்களில், பெரிய பானர்களில் நrத் ரங்கள், ஆடை அலங்காரங்களில் வெட்கமற்ற ஆலிங்கனங் களில் சிரிக்கிறார்கள். இது கம்மா மாதிரிக்கு. மிச்சத்தை