பக்கம்:பிராயச்சித்தம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 161 வெள்ளித்திரையில் காண்கையில் அசந்து போவீர்கள். உள்ளே வாருங்கள்!” அழைக்கிறார்கள் டிக்கட்கெளண்டர் களில், ஜனங்கள் நெரிகின்றனர். கோமதி இன்னேரம் வந்திருப்பாள். பையனும் அவளும் வீட்டுன் போயிருப்பார்கள். ஆனால் என்னைப் பற்றிக் கவலைப்படக் கோமதிக்கு இன்னும் நேரம் ஆக வில்லை. பாவம் கோமதி! இத்தனை வயது நான் வாழ்ந்து கண்ட பலன், எனக் காகக் கண்ணிர் உகுப்பதற்கு நான் திரட்டக்கூடிய, முடித்த ஒரே ஆசாமி, கோமதிதான். அவளாவது இருக் கிறாள் என்று ஆறுதல் அடைய வேண்டியதுதான். அவ ளுடைய கண்ணிருமில்லை யென்றால் எனக்காகக் கண்ணிரே இல்லை. கமலாம்பிகே உன் கிருபை அப்படி யென்றால் நான் என்ன செய்யமுடியும்? அம்மா, என்னை மன்னித்துக்கொள். எனக்கு இனிமேல் ஒடச் சக்தியில்லை. கோமதி, அழு. உன் கண்ணிரில்தான் கரையேற வேண்டும். கண்ணிர் தேவைதானம்மா! உன் கண்ணிரை எனக்கு அருளி. ஆனால் நாளடைவில் கோமதி மறந்து போவாள். மறக்கவேண்டியதுதானே. பாவம், குழந்தை. மறதி யெனும் மருந்தே, உன்னிலும் ஒளஷதம் ஏது அடுத்த ஜன்மத்தில் நானே எனக்கு மறந்துபோவேன். மறதிதான் நிம்மதி. நடந்தார். ஒவ்வொரு பிறவிக்கும் இப்போ பட்டதே போதும் இனி ஜ ன் ம மே வேண்டாம்! என்கிறோம். ஏதோ ஜன்மம் நம் கையில் இருக்கிறமாதிரி அதே சமயத்தில் இது மறு ஜன்மத்தில் நம்பிக்கையைக் குறிக்கிறதா? பி.-i: