பக்கம்:பிராயச்சித்தம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 லா. ச. ராமாமிருதம் உயிரின் வெட்கமற்ற தன்மைக்கு வருந்துவதா? அல்ல. தெளிவு காண, உயிரின் பிரயத்தனத் தீவிரத்துக்கு அதிசயிப்பதா? 'விரட்டு விரட்டு!!' ஓடிக் கொண்டேயிருக்கிறேன். இப்பவும், இதுவும் ஒட்டம்தான்.

  • கல்லால் அடி!"

காரணம்? காரணமே வேண்டாம். ஒடுகிற காரணம் ஒன்றே போதும், துரத்துவதற்கு, வாழ்க்கையின் தத்துவமே இதுதான் என்று புரிந்துகொள்ள நான் வக்கற்றுப் போனால் தப்பு யார்மேல் யாரை தான் குற்றம் சொல்வது? பூமிக்கு வரும்போதே உயிருக்கும் உடலுக்கும் ஏதோ ஒப்பந்தத்தில்தான் வருகிறோம். ஒப்பந்தம் முறையாக நிறைவேறினால் முழுவாழ்வு வாழ்ந்து உயிர் பிரிகிறது. ஒப்பந்தத்தில தோற்றால் உடல், அதன் நியாயமான முடிவுக்குமுன் முற்றுப்புள்ளி யாகி உயிர் இருக்கைக்குத் தவிக்கிறது. ஒப்பந்தம்? விபரங்கள்தான் தெரியவில்லை, தெரிவ. தில்லை. மணலில் இறங்கி வெளிச்சமான இடங்களை விலகி கடலை நோக்கி நடந்தார். தூரத்திலிருந்து, மெரீனா ஒரு ரங்கராட்டினமாகத்தான் தெரிகிறது. விளக்குகள், வண்ணங்கள், வாஸனைகள், சதா சலனம், சத்தம். ப்ளாஸ்டிக் சாமான்கள், சங்கு, மணி, சோழி, பழையப் புத்தகங்கள், பாத்திரங்கள்-இப்போது மரீனாவில் விற் காத சாமான்களே இல்லை. குப்பையையே பணமாக்கி விடும் இடம் மரீனாதான். 'சூடு பஜ்ஜி!" சூடான பஜ்ஜி இல்லே. சூடு பஜ்ஜி. பஜ்ஜி கேட்டவுடன் ஏற்கெனவே போட்டு வைத்திருக்கும் பஜ்ஜியைக் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் ஒரு.