பக்கம்:பிராயச்சித்தம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 163 தரம் புரட்டியெடுத்து 'யார் கேட்டது? இதோ நான், நான்- எத்தனை பேர் அதற்குக் க்யூ! எண்ணெயின் காய்ச்சல் நெடி நாசியைப் பொசுக்குகிறது. நடந்தார். காலடியில் மணல் சரக், சரக். ஒரு வண்டிக் கடையைச் சுற்றி புடவை, ஜீன்ஸ், ஷெர்வாணி கம்மீஸ், அக்குள் தெரிய, தோளில்லாத கவுன், கறுப்பு மூக்குக் கண்ணாடி, ஒரு அங்குல கனத்துக்கு முகங் களில் பூச்சு, க்ராப் (ஆண்ா பெண்ணா?) பாப் அவிழ்த்து விட்ட கூந்தல், குதிரைவால் கொண்டைகள், கணைப்பு, எக்காளம், கொம்மாளம்... 'யா யா, நோ மான், யெஸ், guy, ga, ga, ஹோ!. ஹோ, கெக்கே!' நடந்தார் சென்ற திக்கில், கடலை நெருங்க நெருங்க, ஜன நட மாட் டமும் அதன் இரைச்சலும் பின்தங்கி விழுந்தன. பொடி மணல் அகண்ட மெத்தையாக விரிந்தது. நீல வான டிவாரததை ஜலத்தின் கருநீல விளிம்புக் கோடு கட்டிற்று. இருளுக்கு ஒரம் தைத்த ஜரிகையும் போல அலைகள் நுரை கக்கிக்கொண்டு, கைகளாக வரவேற்றன. இரவில்லை. பகலில்லை அலைகள் வரவேற்காத நேரமே யில்லை. கரையோரம் ஒரு ஒடத்தின்மீது சாய்ந்து நின்றபடி அலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றார். so; ஆகவே? இன்னும் கொஞ்ச நேரம்தான். ஆட்டிவிட்ட தொட்டில் போல், இதவான விரக்தியில் மனம் மிதந்தது. சாவுக்குப்பின் நேர்வது என்ன? ஆயிரம் வாதங் களுடனும், எதிர்வாதங்களுடனும், முடிந்த நிரூபனை களுடனும் இன்னும் யூகம்தான். பிறந்த குற்றத்துக்குச் சாவு குற்றமாகையில் அதற்குத் தீர்ப்பே கிடையாது.