பக்கம்:பிராயச்சித்தம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 169 அவன் அப்படிக் கேட்ட rணமே, தர்மராஜன், சந்திரன், தூரத்தில், ஒரு சிவந்த கண்போல் கடல் விளிம்பை உதைத்துக்கொண்டு கிளம்புவதைக் கண்டார். அலைகள் வெள்ளித் தகடுகளெனத் தகதகத்தன. பெளர்ணமி கழித்து இரண்டாம் நாள், கூடவே நெஞ்சி லும் நிலா உதயமாயிற்று. சட்டென ஒரு நூலை இழுத்த தால் சிக்கே பிரிந்தாற் போன்ற ஒரு தெளிவு கண்டார். 'தம்பி ஒரு காரியம் செய்வையா?" 'சொல்லுங்க.' 'நரேனிடம் போய் நான் சொன்னதாகச் சொல்லுங்க. "நாளை மாலை ஐந்து மணிவாக்கில் கமலாம்பிகை அம்மன் கோயிலுக்கு வந்தால், நீ என்னிடம் தேடும் பொருளுக்கு விளக்கம் கிடைக்கும். எங்கே சேதியைத் திருப்பிச் சொல்லுங்க!” சொன்னான். 'சரி அவ்வளவுதான்.' அவர்கள் போய்விட்டார்கள். தர்மராஜன் வெகுநேரம் அவர்களைச் சிந்தித்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தார். தீர்மானம் எடுத்த பின் வரும் ஒரு அமைதி தன் அகன்ற சிறகுகளை விரித்து அவர்மேல் இறங்கியது. தர்மராஜன் அலைகளை வணங்கினார். தைரியம் என்பது என்ன? நம்பிக்கையிலிருந்து விடுதலை. நம்பிக்கையை இழந்தபின்.உரித்த உண்மையை என் சொந்த அழகுக்குப் பங்கமில்லாமல் வரிப்பதுதான். அலைகள் பாட்டுக்குச் சிரித்துக் கொண்டிருந்தன. முன்னேயும்தான் சிரித்தன. இப்பவும்தான் சிரிக்கின்றன. அவை எப்பவும் சிரித்துக்கொண்டே தான் இருக்கும்.