பக்கம்:பிராயச்சித்தம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 லா. ச. ராமாமிருதம் தகையை வாங்கிக்கொள்ள சம்மதிப்பாளா? இதற்குள் ஸேட்ஜி சும்மாயிருப்பாரா? யார் யாரைச் சந்தேகப் படுவார். சந்தேகப்பட மாட்டார்? ஆனால் அவர் என்னைத் தேட ஆரம்பிக்கும்போது நான் எங்கே இருப் பேனோ? இந்த ப்ரச்னைகள் அவ்வப்போது நேரும்போது, நேர்ந்தால் சமாளிக்க வேண்டிய விஷயங்கள். இங்கே இரண்டு கேள்விகள் எழுகின்றன. எனக்கே தெரியும், இப்பவே பதிலும் சொல்லி விடுகிறேன். இந்த வம்பு எல்லாம் எதற்கு? கோமதியின் பேரில் உனக்கு உண்மையான அனுதாபமிருந்தால் உன் பணத்தை வெகுமதியாகக் கொடுத்து அவளை நகையை மீட்கச் சொல்ல வேண்டியதுதானே? ஐயாமார்களே, எனக்கு அந்த அளவு வசதியில்லை. எனக்குக் கூழுக்கும் ஆசை. மீசைக்கும் ஆசையாக இருந் திருக்க வேண்டும். அதைவிட இந்த ஆங்கிலப் பழமொழி இங்கு இன்னும் சாலப் பொருந்தும். எனக்குக் கையிலும் தோசை குறையக்கூடாது. தின்னவும் வேணும். இது எவ்வளவு பெரிய துராசை என்று பின்னால்தானே இதரிந்தது? அதன் விளைவைத்தானே இன்னமும் அனு: பவித்துக் கொண்டிருக்கிறேன்! இரண்டாவது கேள்வி இவ்வளவு ரிஸ்க் எடுத்துக் கொண்டாவது கோமதிக்கு உதவி செய்ய வேண்டும் என்று உனக்குக் கோமதிமேல் ஏன் இந்தக் கரிசனம்? அவள் உனக்கு ற்றாரா உறவா? ஆமாம் மண்டையில் ஆணி அடிக்கும் கேள்வி அதே பளிச்சுடன் இதற்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லையே! இதே கேள்வியைத்தான் கோமதியின் கண வனும் என்னைக் கேட்டான். ஆனால் வேறு பாஷையில். நான் நினைக்கிறேன். வாழ்க்கையில் சில கேள்வி களுக்குப் பளிச்சென்ற பதில்கள் என்றுமே கிடைக்காது. அதனால் சொல்லும் பதிலில் உண்மையில்லை என்று