பக்கம்:பிராயச்சித்தம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 லா. ச. ராமாமிருதம் அவரைச் சுற்றி மாத்திரைகள், திரவ மருந்துகள், சீசாக் களுக்குக் குறைச்சலே இல்லை. நான் உணவிலும் தூக்க மாத்திரையைக் கலத்தேன். ஸேட் டின் சாவிக் கொத்து இருக்குமிடம் எனக்குத் தான் இதற்குள் தெரியுமே! கீழே இறங்கி லேஃபைத் திறந்து லாக்கரிலிருந்து கோமதியின் பெயர் சீட்டுக் கட்டித் தொங்கிய பையைத் தேடி எடுத்துக் கொண்டேன். பழையபடிப் பெட்டகத்தைப் பூட்டி, சாவியை எடுத்த இடத்துக்குத் திருப்பிவிட்டு-என்னால் நினைத்துப் பார்க்க முடிந்த அளவுக்கு எல்லா எச்சரிக்கைகளையும் எடுத்துக் கொண்டேன் என்று .ெ ச ல் ல வேண்டியதில்லை. நகையைப் பத்திரப் படுத்திவிட்டுத் திரும்பி வந்து படுத்து ஆகாயத்தை அண்ணாந்த பின் யோசனை அதன் ஓயாத வேலையை செய்யத் தொடங்கிவிட்டது. தகையை இழந்தபின் சும்மா விடுவானா? நினைக்க நினைக்கப் புதுப்புதுப் பயங்கள் தலை காட்ட ஆரம்பிததுவிட்டன. இந்தமாதிரி காரியத்துக்கு எல்லாம் நாம் லாயக் கில்லை. இன்றைக்கு இனிமேல் நேரமில்லை. நாளைக்கு தகையை லேஃபில் திரும்ப வைத்துவிட்டு நமக்கேன் பாடு? கோமதிக்கு என்னால் இயன்ற உதவி செய்து விட்டு ஒதுங்கிவிடுவதுதான் சரி என்ற மு. டி வு க் கு வந்தேன் ஆனால் மறுநாள் காலை நடந்தது என்ன? நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? லேட் படுக்கையில் கிடந்தார். அப்படியிருந்தால்கூட பரவாயில்லை. ஸேட்டுக்கு இதயம் பலவீனம், தூக்கத்தில் இறந்து விட்டார் என்று (வைத்ய சோதனைப்படி, உண்மையும் அதுதான்) விஷயம் முடிந்திருக்கும். ஆனால் மருத்துவ சோதனையில் நாயின் உணவிலும் மருந்து கலந்திருந்தது வெளிப்பட்டதும் இந்த விவகாரத்தில் என் எண்ணமும் நடத்தையும் அப்படி ஒன்றும் வெள்ளையில்லை-அதுவும்