பக்கம்:பிராயச்சித்தம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 177 உண்மைதானே!- என்று மாட்டிக் கொண்டேன். அப்பவும் நகை அகப்படவில்லை. போலிவில் வன்முறைகளையும் சமாளித்துக் கொண்டு பிடிவாதமாக நகையைப் பற்றிய எத்தத் தகவலையும் நான் வெளியிடவில்லை. அதற்குரிய தென்பு எனக்கெப்படி வந்ததோ இன்னும் திகைப்பில் தான் இருக்கிறேன். காரணம், எக்காரணத்தைக் கொண்டும் என்னால் கோமதிக்கோ அவள் வேலைக்கோ எவ்விதத் தொந்தரவும் ஏற்படக் கூடாது. சந்தர்ப்ப சாகசியத்தில் நகைத் திருட்டுக்காக சிrை யடைந்து அதை அனுபவித்துவிட்டு வெளியேயும் வந்து விட்டேன். தண்டனையை அனுபவித்து விட்டாலும் மனதில் நிம்மதியில்லை. நகை என் வசத்திலிருக்கும் வரை எனக்கு நிம்மதி கிட்டாது என்று அறிந்தேன். ஏனெனில், வெளி வந்து பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குள் நான் தெருவில் சவுக்கத்தை விரித்து, புல்லாங்குழல் வாசித்துப் பிச்சை யெடுத்துக் கொண்டிருக்கையில் தற்செயலாக கோமதியின் கண்ணில் பட்டுவிட்டேன். விட்ட இடத்திலிருந்து விதி யின் சங்கிலி தன் கொக்கிகளைத் தன் இரக்கமற்ற கதியில் மீண்டும் முடையத் தொடங்கிவிட்டது. இன்னொன்றும் தெரிகிறது. தற்செயல்’ என்பதேயில்லை. செயலின் வழியும் கதியும் நமக்குப் பிடிபடுவதில்லை அவ்வளவு தான் , தவிர மனிதச் சட்டம், சமுதாயத்தின் பார்வைகள் இவைகளைத் தாண்டியது உண்மையும் அதன் நியதியும். அதுவும் நம்மை விடாது. நாமும் அதைத் தப்ப முடியாது. அது பிடியும்படாது. ஆகையால் இப்போது நான் உங்கள் எதிரில் நிற்கிறேன். இன்னும் ஒரு கேள்விதான் பாக்கி, நகை எங்கே? பி.-12