பக்கம்:பிராயச்சித்தம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 லா. ச. ராமாமிருதம் என் பெரியப்பா, தான் பெரிதாகக் கருதிய பொருள் கள், சில தஸ்தாவேஜுகளை பத்திரப்படுத்தியிருக்கும் இடத்தை எனக்குச் சொல்லியிருந்தார். தன் மகனைவிட என்னை, ஏன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமாகக் கருதினார்; அது அவருக்குத்தான் வெளிச்சம். அவருடைய இஷ்டம். அங்கேதான் கோமதியின் நகை இருக்கிறது, இந்தக் கோவிலுள், அம்மன் கர்ப்பக்ருஹத்துள். அந்த இடம் மணிக்குக்கூடத் தெரியாது. அப்படித்தான் பெரியப்பா இஷ்டம். முந்தி கோவில் சாவி, பல செளகரியங்களுக்கு ஒரு கல்லின் வெடிப்புக்குள் சொருகி யிருந்தது. ஆனால் நான் சிறைக்குச் சென்றபின், தர்ம கர்த்தாவின் கட்டாயத்தின்படி, மணியிடம்தான் இருக் கிறது. மணி வா, அம்மன் வாசல் கதவைத் திற. மணி கதவைத் தி ற ந் து வி ட் டு வியப்புடன் தர்மராஜனைத் தொடர்ந்தான். தர்மராஜன் தன் சட்டை யைக் கழற்றி எறிந்து வெறும் உடம்புடன், அம்பாளின் பின்புறத்தில் அவள் பீடத்தில் துழாவினார். பீடத்தின் அடிப்பாகம் அகலமாக ஆரம்பித்து, படியாகக் குறுகி, தாமரையில் அவள் நிற்கிறாள். தெரிந்தவனுக்கும் தேடித் தேடினால்தான் கிடைக்கும். பெரியப்பா தன் பிள்ளையைக்கூட நம்பவில்லை. தயாராகக் கொணர்ந்திருந்த பென்சில் டார்ச்சி"ல் ரொம்பவும் உஷாராகத் தேடினதில் விளிம்பின் கோடுவெகு நுட்பமான கோடு- வெகு நுட்பமாக விரல் ரேகைக்கு இடறிற்று. தாக்கிரதையாக அதன்மேல் விளம்பிக்கொண்டே அதன் வழி போனதும், கல்லின் கறுப்போடு கறுப்பாய் இத்தனை காலமாக வடிந்து வறண்டு போன எண்ணெய்ப் பிசுக்கோடு பிசுக்காய், அதுவே ஒரு பிசுக்குருண்டை போல்,