பக்கம்:பிராயச்சித்தம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 179 ஆ, அகப்பட்டுக் கொண்டாரய்யா? பொத்தானை அழுத்தியதும் ஒரு குறுகிய கல் கதவு விட்டுக் கொண்டாற்போல-விட்டுக் கொள்ள வில்லைதிறந்துகொண்டு தொங்கிற்று. பிரதிஷ்டையோடேயே, சிற்பியின் வேலைத்திறன் கட்டுத்திறன். உள்ளே கை விட்டுத் துழாவியதும், அன்று பெரியப்பா தனக்குக் காண் பித்தபடியே ஒலைச்சுவடி, ஏதேதோ புத்தகங்கள், ஒரு ஸ்தாலி, எழுத்தாணி. 'இந்தாப்பா மணி, பார்த்துக்கோ ஓலைச்சுவடி. கோயில் பூஜையில் என் உரிமையை ஸ்தாபிக்கும் சாஸனம். நான் சும்மா ஜூல் காண்பிக்கவில்லை என்று உனக்கு நிச்சயமாச்சா? இல்லை உன்னிடம் இப்போதைக்குக் கொடுக்கப் போவதில்லை. உன் ஆத்திரத்தில் கிழித்துப் போட்டுவிடுவாய். நகல் வேனுமானால் எடுத்துத் தருகிறேன். இப்போ நேரமில்லை. இப்பவே ஏதேனும் விஷமம் பண்ணாதே, பண்ணினையோ இத்தனை பேரும், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட-சாக ஆ!' நகைப் பையை எடுத்து வெளியே வந்தார். 'நான் இதைத் திறந்துகூடப் பார்த்ததில்லை. இது கோமதியின் நகை போலச் சீட்டு தொங்குகிறது பார்த்தீர் களா? ஆனால் இதன் மேல் கடன் பாக்கியிருக்கும் வரை இதற்கு அதிகாரம் கடன் கொடுத்தவருக்குத்தான். மனக் சந்த் பாய் இப்போ இல்லை. அதனால் அவருடைய வாரிசிடம் இதை எல்லோர் முன்னிலையிலும் சேர்த்து விடுகிறேன், இந்தாங்க கோபிச்சந்த்பாய்!” கோபிசந்த் பையை அவிழ்த்து சங்கிலியை எடுத்தான். ஒற்றை வடம் கன கெட்டி யாய், சற்று ஒளிமங்கி, லேசாக உயிர் கொண்டு, இரை தின்ற குட்டிப் பாம்புபோல் அவன் கைகளில் சோம்பித் துவண்டது. யோசனையாக, ஒரிரண்டு நிமிடங்கள் கையில் தூக்கிப் போட்டுப் பிடித்துக்