பக்கம்:பிராயச்சித்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் #9 'ஏன் இல்லை? எவன் எவனோ கொடுத்துவிட்டுப் போகும் நன்கொடைகளில், குப்பை கூளங்கள் நடுவில் நல்ல புத்தகங்களும் இருக்கின்றனவே! ராமகிருஷ்ணர், விவேகானநதர், பைபிள் மில்டன், ஹோமர் கூட , அருள் மொழிகள்-அவைகளின் துணையில்தான் மனம் ஒரளவு தெளிவு கண்டது. அந்தத் தெளிவு மெய்யோ பொய்யோ, தற்காலிகமோ-தேவையாகத்தானே இருக்கிறது! அதனால் தான் இங்கே இப்போ, நாற்காலியில் சுகமாகச் சாய்ந்த படி இந்த வேளையை நன்றி உணர்வுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். - இன்னம் கேட்டால், முன்னைக் காட்டிலும் நான் ஆரோக்யமாகவே இருக்கிறேன் . கட்டாயமான உழைப்பு வேளை, கட்டாயமான உணவு வேளை, உணவில் அளவுஇப்படிக் கட்டாயங்களிலேயே ஒரு கட்டுப்பாடு, உடலுக்கும். மனதுக்கும் ஏற்படுகிறது. எதிலும் நல்லதையே எடுத்துக் கொள்ள வேண்டும். கைதிக்கு வேறு வழியும் என்ன இருக்கிறது சொல்லம்மா...' பெருமூச்செறிந்தாள். நான் குறைப்பட்டுக் கொள்ளவே கூடாது. பட்டால் பாடத்தில் டோவேன். பாபம் என்று ஒன்று இருக்கிறது கோமதி. நன்றி கெட்டதுதான் பாவம். எல்லோரும் பிரியமாகத்தான் இருந்தார்கள். 'ஐயா வழிக்குப் போவா தீங்கடா அதுவே அங்கே பெரிய விஷயம். வார்டருக்கு என்னைப் பிடித்துவிட்டது. நீ சொல்கிற நிறம்கூட கை கொடுத்திருக்குமோ என்னவோ? விசேட தினங்களில் விட்டுக்கு அழைத்துப் போய், உண்டி, திண்டி சாப்பாடு, ஐயாபாடு மோக்ளாதான். அதெல்லாம் பற்றி நீ எவ்வளவு புரிந்து கொள்வாயோ, உன்னால் புரிந்துகொள்ள முடியுமோ...' நான் ஒண்ணுமே சொல்லலியே ஸார்' பதறினாள்.